"ஆடையின்றி" தோன்றும் நிர்வாண பெண்கள்.. "அங்கேயிருந்து" வாட்ஸ்அப்பில் போட்டோ வரும்.. ஓபன் பண்ணாதீங்க
சென்னை: தொழில்நுட்பங்கள் பெருக பெருக, அதை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகிவிட்டதை மறுக்க முடியாது.. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார், புது எச்சரிக்கை ஒன்றை பொதுமக்களுக்கு விடுத்துள்ளனர்.
சமீப காலமாகவே, பணம், நகைகளை பறிக்கும் மோசடி கும்பல்கள் ஆன்லைனில் வட்டமடித்து வருகிறார்கள்.. செல்போன்களை, யாராலுமே தவிர்க்க முடியாத பட்சத்தில் இதை தான் தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தி நூதன கொள்ளைகளில் இறங்கி உள்ளனர்.

டிஜிபி சைலேந்திரபாபு: சமீபத்தில்கூட நம்முடைய டிஜிபி சைலேந்திரபாபு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.. "கடன் தருகிறோம்" என்று மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் விளம்பரம் செய்கின்றனர்.. அவர்கள் தெரிவிக்கும் ஆப்பை டவுன்லோடு செய்யும்போதே, செல்போனில் உள்ள நம்பர், உங்களின் போட்டோக்கள் உள்ளிட்ட விபரங்களை பெற்று விடுகின்றனர்... பிறகு, கடன் வாங்கியவரின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பி பணம் பறிக்கிறார்கள்.. யாரிடமும் உங்களின் போட்டோக்களை பகிர வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு சம்பவம் நடந்தது.. ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வரும் அந்த நபருக்கு 57 வயதாகிறது.. வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், ஆபாச வீடியோ காலில் பேச விருப்பமா? என்று கேள்வி கேட்கவும், அதிகாரிக்கு சபலம் வந்துவிட்டது.. உடனே, ஆமாம் என்று பதில்சொல்லவும், திடீர்னு வீடியோ காலில் ஒரு பெண் வந்து நின்றுள்ளார்.. டிரஸ் இல்லாமல், நிர்வாணமாகவே நின்றுள்ளார் அந்த பெண்..

நிர்வாண வீடியோ கால்: பிறகு, அந்த அதிகாரியையும் டிரஸ்களை கழற்றுமாறு சொல்லியிருக்கிறார்... ஏற்கனவே மண்டை நிறைய சபலத்தில் சிக்கியிருந்த அதிகாரியும், அந்த பெண் சொன்னது போலவே, தன் ஆடைகளை களைந்துள்ளார். இப்படி சில நாட்கள் சென்றுள்ளது. ஒருகட்டத்தில், தனக்கு அந்த வீடியோ கால் அழைப்பு தேவையில்லை என்று அதிகாரி சொல்லவும், "அப்படின்னா, நாங்கள் கேட்கும் பணத்தை தந்துவிடு.. இல்லாவிட்டால், இதுவரை எடுத்த மொத்த ஆபாச வீடியோக்களையும் எல்லாருக்கும் அனுப்பி விடுவோம்" என்று அந்த பெண் மிரட்டி உள்ளார்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த வாரமே கேரளாவில் இதே போல நிகழ்வு நடந்தாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். "நடுத்தர வயதை தொட்ட அந்த நபருக்கு, இளம்பெண் ஒருவர் போன் செய்துள்ளார்.. அந்த பெண் யாரென்றே அவருக்கு தெரியாது..
ஒட்டுத்துணிகூட இல்லை: ஹலோ... என்று பேச தொடங்கி உள்ளார்.. அடுத்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எந்த ஊர்? என்று கேட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென அந்தபெண், வாட்ஸ் அப் வீடியோ காலில் வாங்க என்ஜாய் பண்ணலாம் என்றாராம்.. உடனே இந்த நபருக்கும் சபலம் துளிர்த்துவிட, உடனே வீடியோ கால் செய்துள்ளார்.. அங்கே பார்த்தால், அந்த பெண், உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நின்றுகொண்டிருந்தாராம்.. இதை பார்த்ததும் அந்த நபருக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.. ஆனால் ஆசை யாரை விட்டது? அடுத்த செகண்டே இந்த நபரும் பிறந்த மேனிக்கு சென்றுள்ளார்..
ஒருசில நிமிடங்கள் கழித்து, செல்போன் திடீரென கட் ஆகிவிட்டது.. லைன் கட் ஆகிவிட்டதால் மறுபடியும் போன் வரும் என்று சார் காத்திருந்தார்.. ஆனால், அடுத்த நிமிடமே, அவரது போனுக்கு, அவரது பிறந்த மேனி போட்டோக்கள் வந்து விழுந்திருக்கிறது.. அதை பார்த்ததும் ஆடிப்போய்விட்டார்.. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே, போன் வந்துவிட்டது.. "செல்போனில் வீடியோ காலில் நீ அந்த பெண்ணை ரசித்ததை படமாக்கி வைத்துள்ளோம்...
நாங்கள் கேட்கும் பணத்தை அனுப்பாவிட்டால் உன் மானம் போய் விடும்" என்று மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்திருக்கிறார்கள்" என்றனர் போலீசார்.
இதுபோன்ற கும்பல்கள், முதலில் ஆசையை தூண்டிவிட்டுதான், பணம் பறிக்கும் மோசடியில் இறங்குவார்களாம்.. வெளிநாட்டில் இருந்தோ அல்லது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டோ... குழுவாக செயல்பட்டு பெண்களை பேச வைத்து ஏமாற்றுவார்களாம்.. பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் உள்ள போன் நம்பரை எடுத்து தொடர்பு கொள்ளவும் செய்வார்கள்.. சென்னையில் மட்டும் நாள்தோறும் இந்த மோசடி வலையில் ஏகப்பட்ட பேர் சிக்குகிறார்கள் என்கிறார் அந்த அதிகாரி.

அழகிகள்: அதனால், அறிமுகம் இல்லாத பெண்களிடம் இருந்து வரும் இதுபோன்ற அழைப்புகளை ஏற்று ஏமாற வேண்டாம் என்றும் பெரும்பாலும் வட மாநில அழகிகளை இதற்காக பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், டெல்லி, குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்தே இந்த செக்ஸ் மோசடி கும்பல் அதிகமாக கைவரிசை காட்டி வருவதால், இதுபோன்ற மோசடி கும்பலை பிடிப்பது என்பது கடினமான காரியமாகவே இருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்..!!!
இதோ இப்போது இன்னொரு எச்சரிக்கையையும் போலீசார் தெரிவித்துள்ளனர்.. "வியட்னாம், மொராக்கோ, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெண்களின் போட்டோக்கள், வீடியோக்களுடன் அடிக்கடி அழைப்புகள் வருகின்றன. இதனால் சென்னையில் வசிக்கும் இளைஞர்கள் முதல் வயதான நபர்கள் வரை பெரும்பாலானவர்கள் தவித்துப்போய் உள்ளனர். இது போன்ற அழைப்புகளை எடுத்து பேசினால் சில நேரங்களில் செல்போன்கள் செயல் இழந்து விடுகின்றன.
ஜாக்கிரதை: எதிர்முனையில் பேசுபவர்கள் சில நேரங்களில் மவுனமாக இருக்கிறார்கள்.. சிலர் பெண் குரலில் பேசுவதையும் கேட்க முடிகிறது. இந்த அழைப்புகள் எதற்காக வருகின்றன? என்பதை யூகிக்க முடியவில்லை என போன் அழைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.. ஆனால் இந்த அழைப்புகள் சில நேரங்களில் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்திவிடும்.. வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் அது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தி விடும்.
குறிப்பாக வெளிநாட்டு அழைப்புகள் வரும்போது திடீரென ஆடையின்றி பெண்கள் தோன்றி விடுவார்கள்.. அதனை நீங்கள் ஒரு கணம் பார்த்து விட்டாலே உங்கள் போட்டோ அவர்களின் செல்போனில் பதிவாகிவிடும். இதை வைத்து எதிர்முனையில் போன் செய்தவர்கள் உங்களிடம் பணத்தை பறிக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற ஃபோன் அழைப்புகளை புறக்கணிக்க வேண்டும்.. பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி போலீசில் புகார் அளிக்கவேண்டும்" என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு எண்ணிலிருந்து வாட்ஸ் அப் கால் மூலம் நூதன முறையில் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டுமென சைபர் கிரைம் போலீசார் தங்கள் எச்சரிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.. குறிப்பாக, +84, +62, +63, +212, +917 ஆகிய எண்களில் தொடங்கும் மலேசியா, எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து whatsapp கால் மூலம் மோசடி நடைபெறுவதால் இதுபோன்ற அழைப்புகளை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications