வட தமிழகம் நோக்கி நகரும் டிட்வா புயல்.. சென்னையில் நாளை 47 விமான சேவைகள் ரத்து!
சென்னை: டிட்வா புயல் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் 47 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 36 உள்நாடு, 11 சர்வதேச விமான சேவைகள் என மொத்தம் 47 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுந்தாற்போல் பயண திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக நாளை சென்னையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் தற்போது 10 கிமீ வேகத்தில் வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 330 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை அதிகாலை சென்னையில் இருந்து 25 கிமீ தூரம் வரை நெருங்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை 47 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 36 உள்நாடு, 11 சர்வதேச விமான சேவைகள் என மொத்தம் 47 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இன்றும் 57 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், பெங்களூர், ஹைதராபாத், இலங்கை யாழ்ப்பாணம் என பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனவே இதற்கு தகுந்தாற்போல் பயண திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications