நாளை தீவிர புயலாக மாறுகிறது ஃபனி.. சென்னையிலிருந்து இப்போ எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?
Recommended Video
சென்னை: ஃபனி புயல் நாளை தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அது ஃபனி என்ற பெயர் கொண்ட புயலாக இன்று மாற உள்ளது.
இதுகுறித்து, இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று, கூறியுள்ளதாவது:

சென்னைக்கு தென் கிழக்கே
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே, 1,180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ள நிலையில், நாளை இது தீவிர புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.

மீன்பிடிக்க சென்றவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்கள் ஏப்ரல் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். ஏப்ரல் 30 மற்றும் மே 1ல், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில், ஒரு சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும், பெய்ய வாய்ப்பு உள்ளது.

புயல் கூண்டு
புயல் எச்சரிக்கை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை தொடர்ந்து, தமிழக துறைமுகப் பகுதிகளில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, கடலூர், புதுச்சேரி, ராமேஸ்வரம், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் இந்த புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடிப்பு
மீனவர்கள் யாரும் ஆழ்கடல் மீன்பிடிக்க சென்றிருந்தால், அவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையினர் தமிழகம் முழுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications