சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா புயல் எதிரொலி.. தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் நாளே தேர்வுகள் ரத்து!

Google Oneindia Tamil News

Recommended Video

    6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு- வீடியோ

    சென்னை: கஜா புயல் காரணமாக நாளை தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

    அதுகுறித்த விவரம் இதுதான்:

    திருச்சி பாரதிதாசன் பல்கலை. இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Cyclone Gaja impact: Many Universities in Tamilnadu postpone their examinations

    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சார்பில் நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்திலும் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்தாகியுள்ளன.

    நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு என வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலை. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் டிச.15ல் நடைபெறும்.

    இதேபோல, காரைக்குடி அழகப்பா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த பருவ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி, காரைக்காலில் தகுந்த காரணமின்றி நாளை அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

    English summary
    Many Universities in Tamilnadu postpone their examinations on Thursday, ahead of Gaja cyclone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X