சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Breaking News Live: கஜா புயலின் கண் கரையைக் கடந்தது.. நாகை, வேதாரண்யத்தில் கன மழை!

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் கஜா புயலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் : வானிலை மையம்!- வீடியோ

    சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. இதையொட்டி தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று விடுமுறையாகும். நாகை, கடலூர் மாவட்டங்களில் நாளையும் விடுமுறை தொடரும்.

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு பாம்பன்-கடலூர் நடுவே நாகை அருகே கரையை கடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே புயல் திசை மேற்கு நோக்கி நகர்ந்து பிறகு வழக்கமான திசையில் பயணித்தது. எனவே வானிலை ஆய்வாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. மெரினாவில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.

    Cyclone Gaja - Live updates

    Newest First Oldest First
    2:39 AM, 16 Nov

    கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையைக்கடந்தது
    1:55 AM, 16 Nov

    கஜா புயலின் கண் பகுதியின் பாதி கரையைக் கடந்து விட்டது

    இன்னும் அரை மணி நேரத்தில் கண்ணின் முழுப் பகுதியும் கரையைக் கடந்து விடும்

    கண் பகுதி கடந்தவுடன் புயலின் பின் பகுதி கரையைக் கடக்கும்

    பின்பகுதி கரையைக் கடக்கும்போது எதிர் திசையில் புயல் காற்று வீசும்

    புயல் காற்றுடன் கன மழையும் பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

    1:03 AM, 16 Nov

    கஜா புயலின் கண் பகுதி கரையைக் கடக்க தொடங்கியது - வானிலை மையம்
    12:57 AM, 16 Nov

    கடலூர், நாகை, வேதாரணயத்தில் கனமழை பெய்து வருகிறது

    கஜா புயல் கரையை கடப்பதை அடுத்து மழை பெய்து வருகிறது

    நாகையில் நிறைய மரங்கள் சாய்ந்துள்ளது

    12:38 AM, 16 Nov

    புயல் கரையைக் கடந்து வருவதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்- அமைச்சர் உதயக்குமார்

    புயல் கடந்து போகும் வரை வெளியே வருவதைத் தவிர்க்கவும் - உதயக்குமார் கோரிக்கை

    12:32 AM, 16 Nov

    கஜா புயலின் அதி வேக காற்றுப் பகுதி கரையைக் கடந்து வருகிறது - வானிலை மையம்

    கண் பகுதி விரைவில் கரையைத் தொடும் - வானிலை மையம்

    கண் பகுதி 60 கிமீ தொலைவில் உள்ளது

    புயல் முழுமையாக கடக்க இன்னும் 2 மணி நேரமாகும் - வானிலை மையம்

    12:08 AM, 16 Nov

    கஜா புயல் கரையைக் கடக்க தொடங்கியது - வானிலை மையம்

    நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையைக் கடக்க தொடங்கியது

    கஜா புயலின் முன்பகுதி கரையை கடக்க தொடங்கியது

    முழு புயல் கரையை கடக்க 3 மணி நேரம் ஆகும்

    12:07 AM, 16 Nov

    நாகைக்கு 60 கிமீ தொலைவில் கஜா புயல்

    வேதாரண்யத்தில் பலத்த சூறைக் காற்றுடன் கன மழை கொட்டுகிறது

    புதுச்சேரியில் சூறைக் காற்றுடன் மிக பலத்த மழை பெய்கிறது

    11:56 PM, 15 Nov

    வேதாரண்யத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது

    5 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது

    காரைக்கால், கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சாவூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது

    11:54 PM, 15 Nov

    நாகையில் சூறைக் காற்றுடன் மழை

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை

    11:37 PM, 15 Nov

    வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் பேட்டி

    கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடக்கும்

    11:36 PM, 15 Nov

    கஜா புயல் நாகைக்கு தென் கிழக்கே 80 கி.மீ தூரத்தில் உள்ளது

    அடுத்த ஒரு மணி நேரத்தில் கஜா புயல் கரையைக் கடக்கும்

    வேதாரண்யம் - நாகை இடையே புயல் கரையைக் கடக்கும்- வானிலை மையம்

    11:35 PM, 15 Nov

    ராமேஸ்வரம், கடலூர், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

    பாம்பன், தங்கச்சிமடம், அக்காள்மடம் பகுதிகளில் கனமழை பெய்கிறது

    இராமேஸ்வரம் தீவு பகுதி முழுதும் வரலாறு காணாத அளவிற்கு கன மழை

    11:32 PM, 15 Nov

    சென்னையில் பலத்த காற்று வீசுகிறது

    நகரின் பல பகுதிகளில் மழையும் பெய்கிறது

    கூடுவாஞ்சேரியில் பலத்த காற்றுடன் மழையும் பெய்கிறது

    காட்டாங்கொளத்தூரிலும் கன மழை பெய்து வருகிறது

    10:33 PM, 15 Nov

    வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி

    கஜா புயல் கரையை கடக்கும்போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்

    9:55 PM, 15 Nov

    கஜா புயல் இரவு 12 மணிக்கு பிறகே கரையை கடக்கும்

    வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    தற்போது கஜா புயல் 11 கிமீ வேகத்தில் நகர்கிறது

    9:19 PM, 15 Nov

    கஜா புயல்: மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு

    கடலூர், ராமேஸ்வரம், நாகை மாவட்ட மக்கள் பலர் மீட்பு முகாம்களுக்கு மாற்றம்

    26,399 மக்கள் முகாம்களில் தங்க வைப்பு

    3,871 குழந்தைகள் முகாம்களில் தங்க வைப்பு

    164 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது

    8:53 PM, 15 Nov

    நாகைக்கு கிழக்கே 110 கிலோமீ்ட்டர் தொலைவில் கஜா புயல்
    8:51 PM, 15 Nov

    பாம்பனில் கன மழை
    8:45 PM, 15 Nov

    திருவாரூர், திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டையில் மின் வினியோகம் நிறுத்தம்

    பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் நடவடிக்கை

    8:11 PM, 15 Nov

    வேகமாக நகர்ந்து வருகிறது கஜா புயல்

    நாகைக்குக் கிழக்கே 125 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது

    8:11 PM, 15 Nov

    புயலை நெருங்குவதால் பாம்பனில் மின்சாரம் துண்டிப்பு

    பாம்பன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது

    7:51 PM, 15 Nov

    புயல் முன்னெச்சரிக்கை குறித்து கேட்டறிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    அமைச்சர் உதயகுமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்

    7:50 PM, 15 Nov

    கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 40 முகாம்கள் செயல்பாடு

    3246 குடும்பங்களை சேர்ந்த 12,398 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்

    7:43 PM, 15 Nov

    லால்குடி, ஸ்ரீரங்கம், சமயபுரம், நன்னிலம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது

    வேதாரண்யத்தின் சுற்று வட்டாரத்தில், மின் வினியோகம் நிறுத்தம்

    7:26 PM, 15 Nov

    நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
    6:55 PM, 15 Nov

    கஜா புயல் - புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
    6:53 PM, 15 Nov

    நாகைக்கு கிழக்கு 138 கி.மீ தொலைவில் கஜா புயல் - வானிலை மையம்

    11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது - பாலச்சந்திரன் தகவல்

    புயலின் வெளிப் பகுதி கரையைத் தொட்டு விட்டது - வானிலை மையம்

    8 மணியளவில் புயலின் உட்பகுதி கரையைத் தொடும்- வானிலை மையம் தகவல்

    புயல் காரணமாக காரைக்கால் பகுதியில் கன மழை பெய்து வருகிறது

    6:43 PM, 15 Nov

    புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்குப் பஸ் போக்குவரத்து நிறுத்தம்

    காரைக்காலுக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை

    தஞ்சாவூர் மாவட்டத்திலும் பஸ் போக்குவரத்து நிறுத்தம்

    மன்னார்குடியிலிரும் பஸ் போக்குவரத்து நிறுத்தம்

    பலத்த மழை பெய்து வரும் பல்வேறு ஊர்களிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது

    நாகையில் பலத்த மழை பெய்வதால் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தல்

    6:21 PM, 15 Nov

    கஜா புயல் எதிரொலி.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    நாகை, கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    READ MORE

    English summary
    Cyclone Gaja will make Landfall on Today. Schools and collages loated in 6 districts gets holiday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X