விலகி போகும் மகா புயல்.. தமிழகத்திற்கு கன மழை இல்லை.. ஆனால் 2 குட் நியூஸ் இருக்கு!
Recommended Video
சென்னை: அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த 'மகா' புயல் தமிழகத்தை விட்டு விலகி லட்சத்தீவுகளை தாண்டி நகர்ந்து சென்று கொண்டுள்ளது. எனவே, தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள மகா புயல், தீவிர புயலாக மாறியது. இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி மங்களூரில் இருந்து மேற்கு வட மேற்கு திசையில் அரபிக்கடலில், 390 கிலோ மீட்டர் தொலைவில் புயல் உள்ளது.
இதேபோல, லட்சத்தீவு பகுதியில் அம்மினி தீவில் இருந்து 400 கிலோ மீட்டர் வடக்கு வடமேற்கு திசையிலும், புயல் உள்ளது.

வடகிழக்கு பருவமழை
புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியவானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, அக்டோபர் 3வது வாரம் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழை காலமாகும். இவ்வாண்டு வட கிழக்கு பருவமழை, அக்டோபர் 15ம் தேதி, தொடங்கியது.

இரு புயல்கள்
கியார் மற்றும் மகா புயல்கள் இந்த காலகட்டத்தில் உருவாகின. ஆனால், அவை நேரடியாக தமிழகத்தை நெருங்கவில்லை. ஆனால் பரவலாக மழை பெய்ததால், அக்டோபர் 31 வரை தமிழகத்தில் 17 செமீ பெய்வது வழக்கம்.

மழை அதிகம்
இந்த வருடம், இதே காலகட்டத்தில் 22 செமீ பெய்துள்ளது. தேசிய அளவில், இக்காலகட்டத்தில் சராசரியாக, 7 செ.மீ மழை பெய்யும். ஆனால், இம்முறை, 11 செ.மீ பெய்துள்ளது. இது இயல்பைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு குட் நியூஸ்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மற்றொரு குட் நியூசும் உள்ளது. வரும் 4ம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது,












Click it and Unblock the Notifications