Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமல்லபுரம் இல்லையாம்! தடம் மாறும் மாண்டஸ்! தடுமாறப் போகும் சென்னை? கொஞ்சம் சூதானமா தான் இருக்கனும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : வங்க கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சென்னைக்கு மிக அருகே அந்த புயல் கரையை கடக்கும் என பிரபல வானிலை ஆய்வு இணையதளம் ஒன்று குறிப்பிட்டு இருக்கிறது.

தென்கிழக்கு வங்க கடலில் கலந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக உருவாகி தற்போது மாண்டஸ் புயலாக வலுவடைந்து இருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தற்போது மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கு சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 165 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் ஆனது மையம் கொண்டுள்ள நிலையில் மணிக்கு சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வரும் நிலையில் இன்று இரவு புதுச்சேரி தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஏற்கனவே பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தென் மாவட்டங்களிலும் பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

கண்காணிப்பு தீவிரம்

கண்காணிப்பு தீவிரம்

இந்த புயல் கரையை கடக்கும் போது சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்றுடன் கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நேரத்தில் அவசியம் இன்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து காஞ்சிபுரம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடலோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தடம் மாறும் மாண்டஸ்

தடம் மாறும் மாண்டஸ்

இந்த நிலையில் மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனவும் சென்னைக்கு அருகே இருக்கும் கேளம்பாக்கம் பகுதியில் கரையை கடக்கும் என பிரபல வானிலை ஆய்வு இணையதளமான விண்டி டாட் காம் குறிப்பிட்டுள்ளது. அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி அந்த புயல் மெதுவாக கடல் பரப்பை பயணித்து சென்னையிலிருந்து அருகே இருக்கும் கேளம்பாக்கம் பகுதியில் கரையை கடக்கும் எனவும், 12 மணியிலிருந்து ஒரு மணிக்கு உள்ளாக புயல் கடக்கும் நிகழ்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேளம்பாக்கம்

கேளம்பாக்கம்

புயலின் கண் என அழைக்கப்படும் மையப்பகுதி 12:30 மணியிலிருந்து ஒரு மணிக்குள்ளாக கேளம்பாக்கம் பகுதியில் வந்தடையும் எனவும் இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 60 கிலோ மீட்டர் முதல் 70 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. புயலின் ஆரம்பப் பகுதி தொடங்கி புயலின் இறுதி பகுதி சுமார் 30 நிமிடங்கள் வரை கடக்கலாம் எனவும் மையப்பகுதி கடந்து அதன் பின்னர் தாம்பரம் ஸ்ரீ பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிப்பு அதிகரிக்கும்?

பாதிப்பு அதிகரிக்கும்?

இதனால் எதிர்பார்த்ததை விட சென்னையின் புறநகர் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதுவரை சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் 12 புயல்கள் கடந்து சென்றுள்ள நிலையில் 120 ஆண்டு கால வானிலை ஆய்வு வரலாற்றில் 13வது புயலாக பதிவாக வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்று வீச கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+