என்ன முதல்வர் ஸ்டாலின் முகம் தெரியுது.. வலைதளத்தில் டிரெண்ட்டாகும் வெள்ளபாதிப்பு போட்டோ.. பின்னணி
சென்னை: மிக்ஜாம் புயல் மழை காரணமாக பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே தான் வெள்ளத்துக்கு நடுவே முதல்வர் ஸ்டாலினின் முகம் தெரியும் வகையிலான போட்டோ ஒன்றை எதிர்க்கட்சிகளை சேர்ந்த நெட்டிசன்கள் வேகமாக பரப்பி டிரெண்ட் செய்து வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3ம் தேதி நள்ளிரவு முதல் 4ம் தேதி நள்ளிரவு வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இடைவிடாமல் பெய்த இந்த மழையின் காரணமாக 4 மாவட்டங்களும் மழைநீரில் மூழ்கின.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளை மழைநீர் மூழ்கடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து புயல் ஆந்திராவில் 5ம் தேதி கரையை கடந்த நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழை நின்றது.
இதையடுத்து மீட்டு பணி என்பது தொடங்கியது. வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் படகுகளில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதோடு வீடுகளில் உள்ளவர்களுக்கு தேவையான உணவு பார்சல்கள், தண்ணீர் வழங்கப்பட்டன. அதோடு வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. இதன்மூலம் படிப்படியாக சென்னை உள்பட 4 மாவட்டங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
மழை வெள்ளத்தில் கார், டூவீலர் பழுதா? உடனே இந்த எண்களை அழையுங்க.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
முன்னதாக தமிழக அரசு சார்பில் சென்னையில் ரூ.4 கோடியில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்ததோடு, 20 செமீ மழை பெய்தாலும் சென்னையில் வெள்ளம் தேங்காது என திமுக அமைச்சர்கள், தலைவர்கள் கூறியிருந்தனர். இப்படியான சூழலில் தான் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதிக மழையால் சென்னை உள்பட 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து ரூ.4 கோடி என்னாச்சி? என அதிமுக, நாம் தமிழர், பாஜக என எதிர்க்கட்சி தலைவர்கள் திமுகவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
புரிஞ்சவன் பிஸ்தா, பாதாம், முந்திரி எல்லாம் 😂😂😂#நக்கிட்டு_போன_4000_கோடி pic.twitter.com/d1yXr4DSVJ
— ArunmozhiVarman 🕉🚩🇮🇳🛕🎻 (@Arunmozhi_Raaja) December 9, 2023
மேலும் தமிழக அரசு மற்றும் திமுகவுக்கு எதிராக வலைதளங்களில் அவ்வப்போது ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகின்றன. குறிப்பாக ரூ.4 ஆயிரம் கோடி எங்கே என்பது உள்பட ரூ.4 ஆயிரம் கோடியை மையப்படுத்தி பல ஹேஷ்டேக்குகள் எக்ஸ் தளத்தில் வேகமாக டிரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சமூக வலைதள பக்கத்தில் வெள்ள பாதிப்பு போட்டோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அந்த போட்டோவில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் உள்ளனர். அதோடு சில கார்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் இந்த போட்டோவை உற்றுப்பார்த்தால் அதில் முதல்வர் ஸ்டாலினின் முகம் என்பது தெரிகிறது. அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள தடுப்பு பணியை தமிழகத்தின் முதல்வராக உள்ள முதல்வர் ஸ்டாலின் சரியாக மேற்கொள்ள வில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் எதிர்க்கட்சியினர் இந்த போட்டோவை டிரெண்ட்டாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications