Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்ட கிட்ட வந்துருச்சுப்பா.. அதி தீவிரமடைந்த மோக்கா புயல்.. தமிழ்நாட்டில் வெளுத்து கட்ட போகுது மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்டுத்துமா என்பது குறித்து வானிலை மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.. அத்துடன் எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது.. மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது நேற்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது.

பின்னர் வங்கதேசம், மியான்மர் அருகே போர்ட் பிளேருக்கு 520 கி.மீ தொலைவில் நிலை கொண்டது.. இதுகுறித்து நேற்றைய தினம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது.

 mocha cyclone mocha will strengthen today, says meteorological department in

அதி தீவிரம்: அதன்படி, மத்திய வங்கக்கடலில் இருந்து படிப்படியாக அதிதீவிர புயலாக மாறி வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. மே 14-ம் தேதி தென்கிழக்கு வங்க தேசம் - வடக்கு மியான்மர் இடையே மோக்கா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 175 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசும் இப்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது..இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அமைச்சர் ராமச்சந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, சிறப்பு எச்சரிக்கையின்படி வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மீன்வளத் துறை கமிஷனருக்கும், கடலோர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும், விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

படகுகள்: மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர், வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள், மே 14ம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது... ஏற்கனவே கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள், விரைவாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல் காரணமாக எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் உள்ளதாவது:

"வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் படிப்படியாக வலுப்பெற்று, 10ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அதிகாலையில் அது மோக்கா புயலாக வலுப்பெற்று போர்ட் பிளேயரில் இருந்து 510 கிமீ மேற்கு-தென்மேற்கே நிலை கொண்டு இருந்தது. பிறகு, அந்த புயல் வட- வடமேற்கு திசையில் நேற்று பகலில் நகர்ந்தது. நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்த அந்த புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றது.

இதன் நிகழ்வின் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

எங்கெல்லாம் மழை: அதே நேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை கணிசமாக வெப்பம் நேற்று உயர்ந்து காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. கடலூர், தர்மபுரி, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவாக காணப்பட்டது.

நேற்று நள்ளிரவு வலுப்பெற்று மோக்கா புயல் இன்று காலை முதல் வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து இன்று மாலையில் மேலும் மிகத் தீவிரம் அடையும்.

வங்கக்கடல்: மேலும், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் அது நிலை கொள்ள வாய்ப்புள்ளது. அதன் பிறகு நாளை மாலை(13ம் தேதி) காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 கிமீ முதல் 150 கிமீ வேகத்திலும், இடையிடையே 165 கிமீ வேகம் வரை உயர்ந்து 14ம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கடற்கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், மோக்கா புயலால் தமிழகத்திற்கு பாதிப்புகள் எதுவும் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+