5 புயல்களுக்கு சமம்! வங்கக் கடலில் உருவான சூப்பர் புயல் மோச்சா கரையை கடந்தது.. மிக மோசமான விளைவுகள்
டெல்லி: வங்கக் கடலில் உருவான அதி தீவிர புயலான மோச்சா புயல் வங்கதேசம்- மியான்மர் இடையே கரையை கடந்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மோக்கா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று முன் தினம் மிகத் தீவிர புயலாக மாறி மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. அதாவது போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கி.மீ. மேற்கு-வடமேற்கே நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நோக்கி 195 கி.மீ. வேகத்தில் கடந்தது.
இதன் காரணமாக ஏற்படும் வெப்ப சலனத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை முதல் மே 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளையில் 6 செ.மீ. மழை, கருந்தன்கோடு, தக்கலையில் 5 செ.மீ., மாம்பழத் துறையாறில 4 செமீ மழை பெய்துள்ளது. இன்று இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசும்.
நாளை தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை கடலோர பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல்50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக் கூடும். வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று சூறாவளி காற்று வீசக் கூடும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ.வேககத்திலும் இடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக் கூடும். எனவே இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கத் தொடங்கியதால் வங்கதேசம்- மியான்மர் இடையே உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை, புயல் காற்று, நிலச்சரிவுகள் நடைபெற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு நாடுகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
புயல் கரையை கடந்த போது வங்கதேசம்- மியான்மர் இடையே உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை, புயல் காற்று, நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் இரு நாடுகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். வங்கக் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. தாழ்வான இடங்களில் 4 மீட்டர் உயரத்தில் நீர் தேங்கியுள்ளது. மின்சாரம், இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. கடற்கரையில் அலைகள் உயர்ந்து காணப்பட்டன. கடலில் உள்ள குப்பைகள் அடித்துக் கொண்டு தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ளது. மீட்பு படையினர் சம்பவத்தில் குவிந்துள்ளனர். மிகவும் ஆபத்தான புயல் என்பதால் மீட்பு படையினரிடம் உதவி கேட்டு போன் மூலம் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. மியான்மரில் 14 வயது சிறுவன் மீது மரம் விழுந்து பலியானார்.












Click it and Unblock the Notifications