ஆடாமல் அசையாமல்.. 3 மணி நேரமாக அங்கேயே நிற்கும் நிவர் புயல்.. வச்சு செய்யுமோ!
சென்னை: நிவர் புயல் 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நகராமல் நீடித்து வருகிறது.
Recommended Video
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் கடந்த 6 மணி நேரமாக 5 கி.மீ. வேகத்தில் நெருங்கியது. இந்த நிலையில் தற்போது கடந்த 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிவர் புயல் நகராமல் நங்கூரமிட்டுள்ளது.
இது வழக்கமாக புயல் ஏற்படும் போது நிகழும் நிகழ்வுதான் என்கிறார்கள். கடலுக்கும், நிலத்திற்கும் இடையே அழுத்தம் குறைவாக இருந்தால் இது போல் புயல் ஒரே இடத்தில் நகராமல் இருக்கலாம்.

நிற்கும்
இந்த புயலானது சென்னையிலிருந்து 450 கி.மீ .தூரத்திலும் புதுவையிலிருந்து 410 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. பொதுவாக ஒரே இடத்தில் நிற்கும் புயல் நிற்கும் இடத்திலேயே வலுவிழக்கவும் வாய்ப்புள்ளது.

சென்னை - காரைக்கால்
இல்லாவிட்டால் வேறு திசை நோக்கி நகரவும் வாய்ப்புள்ளது. ஆனால் நிவர் புயலை பொருத்தமட்டில் நிச்சயம் வலுவிழக்காது என்கிறார்கள். இந்த புயல் நிச்சயம் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் கூறுகிறார்கள்.

அழுத்தம்
புயலின் வேகம் தற்போது தாமதமாவதால் சென்னை- காரைக்கால் இடையேதான் கரையை கடக்கும் என அழுத்தம் திருத்தமாக கூறப்படுகிறது. அழுத்தம் அதிகரித்தால் மீண்டும் புயல் நகர வாய்ப்புள்ளது. எனவே ஒரே இடத்தில் இருப்பதை வைத்து எந்த முடிவையும் எடுக்க முடியாது.

மருந்து மாத்திரை
அது போல் சென்னையில் இன்று முதல் இரு தினங்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் முன்கூட்டியே தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்து மாத்திரைகள், அத்தியாவசிய பொருட்களையும் கைவசம் வைத்துக் கொள்ளும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications