டவ்-தே புயல்.. அடுத்த 4 நாட்கள் முக்கியமாம்.. தமிழகத்தில் எப்போது, எங்கு மழை பெய்யும்?.. முழு விபரம்
சென்னை: டவ்-தே புயல் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கண்டிப்பாக தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று புயலாக மாறியது. இதற்கு டவ்-தே புயல் என்று பெயர் வைக்கப்பட்டது. இன்று காலை டவ்-தே புயல் அதி தீவிர புயலாக மாறியது.
இந்த டவ்-தே புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கேரளாவில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. தற்போது அரபிக்கடலில் இந்த புயலால் 120 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.

நாளை
இந்த புயல் காரணமாக இன்று மாலையில் இருந்து மழை தீவிரம் எடுக்கும். இன்று நீலகிரியில் மழை பெய்யும். அதேபோல் ஊட்டி, கொடைக்கானல், பழனி, கோவை, பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் எல்லாம் இந்த டவ் தே புயல் காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நாளை மறுநாள்
நாளை மறுநாளும் மேற்கு தொடர்ச்சி மலை தொடரை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும். அதேபோல் வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். இதனால் புதுச்சேரி, சென்னை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கூட மழை எதிர்பார்க்கலாம். இந்த புயல் குஜராத்தில் கரையை கடந்தாலும் அதே நாள் தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

செவ்வாய் கிழமை
வரும் செவ்வாய் கிழமை தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்யும். இந்த புயல் விட்டு செல்லும் மேகங்கள் காரணமாக தமிழகத்தில் செவ்வாய் கிழமை கனமழை பெய்யும். தமிழகம் முழுக்க பரவலாகவே டெல்டா, தென் மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நான்காவது நாள்
இது போக மீண்டும் புதன் கிழமை கொங்கு மாவட்டங்களில் மழை பெய்யும். புதன் கிழமை வரை மழை கண்டிப்பாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்யும். இன்றில் இருந்து அடுத்த 4 நாட்களுக்கு கண்டிப்பாக தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications