வங்கக் கடலில் யாஸ் புயல் உருவானது - 25 ரயில்களை ரத்து செய்த கிழக்கு ரயில்வே
யாஸ் புயலால் சென்னை சென்ட்ரல் உள்பட 25 ரயில்களின் சேவையை வரும் 29ஆம் தேதி வரை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் யாஸ் புயல் உருவாகியுள்ளதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நகரங்களில் இருந்து செல்லும் ரயில்களின் சேவையை இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு நியூ ஜல்பைகுரி செல்லும் ரயில், தாம்பரத்தில் இருந்து நியூ தின்சுகியா செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. தற்போது போர்ட் பிளேரில் இருந்து 600 கிமீ தொலைவில் புயல் மையம்கொண்டுள்ளது.

இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், பின்னர் அதிதீவிர புயலாகவும் மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-வங்காளதேசம் இடையே 26ம் தேதி மாலையில் ஆக்ரோஷத்துடன் கரையைக் கடக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 165 கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Eastern Railway suspends 25 trains between May 24 and 29 in view of cyclone Yaas
— ANI Digital (@ani_digital) May 24, 2021
Read @ANI Story | https://t.co/7hvAzHjgHy pic.twitter.com/PuEALQhCtz
இந்த புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
வங்கக் கடலில் யாஸ் புயல் உருவாகியுள்ளதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நகரங்களில் இருந்து செல்லும் ரயில்களின் சேவையை இன்று முதல் வரும் 29ந்தேதி வரை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு நியூ ஜல்பைகுரி செல்லும் ரயில், தாம்பரத்தில் இருந்து நியூ தின்சுகியா செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதேபோன்று, பெங்களூரு, எர்ணாகும், திருவனந்தபுரம், கவுகாத்தி, பூரி, பாட்னா, அகர்தலா ஆகிய நகரங்களில் இருந்து செல்லும் ரெயில்கள் உள்பட 25 ரயில்களின் சேவையை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா












Click it and Unblock the Notifications