சிலிண்டர் முதல் பாஸ்டாக் வரை இன்று முதல் எல்லாமே மாறுது.. மக்கள் அறிய வேண்டியவை
சென்னை: பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாற்றங்களை நாம் எதிர்கொள்ளபோகிறோம்.. சிலிண்டர் முதல் வங்கி கடன், பாஸ்டாக் மற்றும் ஐஎம்பிஎஸ் பணப்பரிமாற்ற விதிகள் வரை பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.. அவற்றை பற்றி பார்ப்போம்.
சிலிண்டர் விலை: சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றப்படும்.. அந்த வகையில் பிப்ரவரி 1ம் தேதி வீடு மற்றும் வணிக சிலிண்டர்கள் விலை மாற்றி அமைக்கப்படும். தற்போதைய நிலையில் தேர்தல் நெருங்குவதால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை. அதேநேரம் வணிக சிலிண்டர்கள் விலை 12 ரூபாய் அதிகரித்துள்ளது. 19 கி.கி எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.12.50 உயர்ந்துள்ளது. ரூ.1924.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக சிலிண்டர் ரூ.1937க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வங்கி வட்டி: இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் சமீபத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து, பல வங்கிகள் வீட்டுக்கடன் வட்டியை பிளோட் ரேட்டிற்கு மாற்றுமாறு வாடிக்கையாளகளை அணுகி வருகின்றன. தொடர்ந்து வட்டி ஏறுவதால் இதுபோல் அணுகி வருகின்றன. இந்நிலையில் ரெப்போ விகிதம் இந்த மாதம் மீண்டும் அதிகரிக்கப்பட்டால்.. கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஐஎம்பிஎஸ் பணப்பரிமாற்ற விதிகள் (IMPS Transfer Rules): ஐஎம்பிஎஸ் மூலம் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக்கணக்கு பணம் அனுப்பும்போது, விதிகள் மாறி உள்ளது. ஒரே மொபைல் நம்பரை வைத்து பல்வேறு வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்படுவதால், புதிய விதிகளை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய விதிகள் மூலம் வங்கிக் கணக்குகளுக்கு இடையே ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக பணம் அனுப்பினால், பழைய முறையை பின்பற்றலாம். அதுவே, வங்கிக் கணக்குகளுக்கு இடையே ரூ.5 லட்சத்துக்கும் அதிமாக பணப்பரிமாற்றம் செய்தால், பெறுநரின் மொபைல் நம்பர் மற்றும் வங்கியின் பெயர் ஆகியவற்றை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணப்பரிமாற்ற விதிகளானது இன்று முதல் (பிப்ரவரி 1ஆம் தேதி) முதல் அனைத்து வங்கிகளிலும் பின்பற்றப்பட இருக்கிறது.
பான்கார்டு : நாடு முழுக்க பாண் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த மாதம் இந்த மாற்றம் கொண்டு வரப்படலாம். அதன்படி தற்போது தனியார் நிறுவனங்கள், சிறிய சிறிய அமைப்புகள் கூட பான் கார்டு விண்ணப்பம் செய்ய வழி உள்ளன. ஆதார் போல தனியாக மையங்களாக செயல்படாமல்.. சிறிய சிறிய கடைகளில் கூட பான் கார்டு விண்ணப்பங்களை செய்யும் வசதிகள் உள்ளன. அதை மாற்ற சாமத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி இனி பான் கார்டுகளை முறையாக அனுமதி பெற்று மட்டுமே விண்ணப்பிக்க பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம்.
எஸ்பிஐ வீட்டுக் கடன் ரூல்ஸ் (SBI Home Loan Rules): எஸ்பிஐ பேங்க் கஸ்டமர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்படும் செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் சலுகைகள் மீதான விதிகள் இன்று முதல் மாறி உள்ளது. ஆக்சுவல் கார்டு ரேட் (Actual Card Rate) விகிதத்தை விட 65bps வரையில் குறைவாக கடன் சலுகைகளை பெற்று கொள்ளாம். இந்த சலுகையானது, ஃப்ளெக்ஸிபே (Flexipay), என்ஆர்ஐ (NRI), சம்பளம் இல்லாதவர்கள் மற்றும் அபோன் கர் (Apon Ghar ) ஆகிய கஸ்டமர்களுக்கு பொருந்தும். இருப்பினும், இந்த வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் கஸ்டமர்களின் சிபில் (CIBIL) ஸ்கோரைப் பொறுத்து மாறுபடும்.
என்பிஎஸ் பெறுதல் ரூல்ஸ் (NPS Withdrawal Rule): தேசிய ஓய்வூதிய அமைப்பில் (National Pension System) பென்ஷன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) புதிய விதி இன்று முதல் அமல்படுத்துகிறது.இந்த விதியின்படி மொத்த டெபாசிட் தொகையில் இருந்து 25 சதவீதத்திற்கு மேல் பணத்தை எடுக்க முடியாது. முன்னதாக உயர் கல்வி, திருமணம், குடியிருப்பு வீடு வாங்குதல் மற்றும் மருத்துவச் செலவுகள் போன்ற நோக்கங்களுக்காக பகுதியளவு டெபாசிட்டை திரும்பப் பெறலாம் என்று பிஎப்ஆர்டிஏ குறிப்பிடப்பட்டது கவனிக்கத்தக்கது.
பாஸ்டாக்: தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. FasTag மாற்றங்களை செய்ய ஜனவரி 31 வரை மட்டுமே அவகாசம் வழங்கியது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை KYC முழுமையடையாத FASTags கள் இன்று முதல் வேலை செய்யாது. ஒரு வாகனத்திற்கு இனிமேல் ஒரு FasTag மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஒரே பாஸ்ட் டாக்கை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டாஸ்மாக்: டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது இன்று முதல் (பிப் 1) அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications