அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிவிட்டு! ஒரு நாள் ஆய்வு செய்தால் போதுமா? முதல்வருக்கு டி.ஜே. கேள்வி
சென்னை: அம்மா உணவகத்தை ஒரு நாளைக்கு முதல்வர் ஸ்டாலின் போய் ஆய்வு செய்துவிட்டால் போதுமா? அதுல எவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கியுள்ளார்.
எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கிடும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த உணவகங்கள் மூலம் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். அப்போது உணவகத்தில் சாப்பிடுபவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அம்மா உணவகத்தின் சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முதல்வரின் ஆய்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இந்த திறனற்ற ஆட்சியில் அம்மா உணவகம் பெரும்பாலான இடங்களில் பெயர் பலகையளவில் தான் இயங்கி வருகிறது.
அம்மா உணவகத்தால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது என்று கூறியது இதே ஸ்டாலின் அரசு தான்! எவ்வளவு நிதி செலவானாலும் எளிய மக்கள் பசியாறட்டும் என்று உத்தரவு போட்டவர் அம்மா!
ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகத்தை திமுகவினர் அடித்து நொறுக்கினர்.
பின்னர் வேலை ஆட்கள் குறைப்பு,உணவு வகைகளை குறைத்தல்,பழுதடைந்த இயந்திரங்கள் மற்றும் நிதி ஒதுக்காமல் என பல வழிகளில் அம்மா உணவகங்கள் அழிவை நோக்கி தள்ளியது திமுக அரசு!
இந்த திமுக ஆட்சியில், பேருந்திற்கு பணமிருந்தால் போதும் அம்மா உணவகத்தில் உணவிருக்கும் என தன் அம்மாவிடம் சொல்லி விட்டு சொந்த ஊரில் இருந்து வேலைக்கும் படிப்புக்கும் வரும் இளைஞர்களுக்கு ஏமாற்றமே இன்று மிச்சமாகியுள்ளது!
நன்றாக சாப்பிட வேண்டிய வயதில் பொருளாதார சூழ்நிலையை கருதி டிபன் சாப்பிடாமல் டீ அருந்தும் அவல நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் அம்மா உணவகங்களை இந்த அரக்க குணம் கொண்ட அரசு செயல்படுத்தாமல் இருந்ததே காரணம்!
தங்கள் குடும்ப கம்பெனியின் தண்ணீர் பாட்டில் விற்பனை பாதிப்படையும் என்பதற்காக எளிய மக்களின் தாகம் தீர்க்கும் அம்மா குடிநீரை நிறுத்தியது நியாயமா? ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் அம்மா மடிக்கணினி நிறுத்தப்பட்டது ஏன்?
அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம், அம்மா மினிகிளினிக் என பல மக்கள் நல திட்டங்களை முடக்கி விட்டு பொய் வேடம் போடும் முதலமைச்சரின் இந்த நடிப்பிற்கு இந்தாண்டின் இறுதியில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது நிச்சயம் கிடைக்கும்! இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications