Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்பு.. ரூ.1,146 கோடியில் மறுகட்டுமானம்! ஸ்டாலினின் மாஸ்! சென்னை குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்பட 3 நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் புது அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இதற்கு பாஜக உட்பட அரசியல் கட்சிகள் நன்றி தெரிவித்திருக்கின்றன.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் படித்தளித்த அறிக்கையில்: "திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 29 ஆயிரத்து 439 அடுக்குமாடி குடியிருப்புகளும், 1 லட்சத்து 70 ஆயிரத்து 462 தனி வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கட்டுமான பணிகள்: மேலும், 172 திட்டப் பகுதிகளில் 79 ஆயிரத்து 94 அடுக்குமாடிக் குடியிருப்புகளும், 89 ஆயிரத்து 429 தனி வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளும் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன.

Apartment Flats Tamil Nadu Government

இந்தத் திட்டப் பணிகளுக்காக ரூ.6 ஆயிரத்து 685 கோடி செலவிடப்பட்டுள்ளது. புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் பணியில் மட்டும் கவனம் செலுத்தி, அத்துடன் நின்றுவிடாமல், பழைய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மறுசீரமைப்பிலும் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது.

அடுக்குமாடி குடியிருப்பு: சென்னை மற்றும் இதர நகரங்களில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சில நீண்டகால பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக சேதமடைந்துள்ளன. இந்தக் குடியிருப்புகளை முறையாகக் கணக்கெடுத்து, அவற்றை மறுகட்டுமானம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தற்போது, தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 93 ஆயிரத்து 891 அடுக்குமாடிக் குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள், 28 ஆயிரத்து 643 குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநா் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும்.

திருச்சி: இதன் முதல்கட்டமாக, 2024-2025-ஆம் ஆண்டில், சென்னை மாநகரில் கிழக்கு கல்லறை சாலை, கொடுங்கையூா், வஉசி நகா் போன்ற திட்டப் பகுதிகள், தஞ்சாவூரில் ஏ.வி.பதி நகா் திட்டப்பகுதி மற்றும் திருச்சியில் கோட்டக்கொல்லை திட்டப்பகுதி ஆகியவற்றில் உள்ள 6 ஆயிரத்து 746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானமும் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்" என்று அறிவித்தாா்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பேரவை தலைவா் அப்பாவு, அமைச்சா் தா.மோ.அன்பரசன், உறுப்பினா்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல்சமது, மதிமுகவின் கு.சின்னப்பா, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாகை மாலி, கொங்கு ஈ.ஆா்.ஈஸ்வரன், விசிகவின் சிந்தனைச் செல்வன், பாஜகவின் நயினாா் நாகேந்திரன், பாமகவின் ஜி.கே.மணி, காங்கிரஸின் ராஜேஷ்குமாா் ஆகியோா் நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பு: 2 வருடங்களுக்கு முன்பு, சென்னை புளியந்தோப்பிலுள்ள கே.பி.பார்க் குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டு, சுவர்கள் பெயர்ந்து வந்தது, மிகப்பெரிய விவகாரமாக அரசியல் களத்தில் அப்போது உருவெடுத்திருந்தது.

இதுபோல சேதம் அடைந்த பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அப்போது பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன. இதையடுத்து, தமிழக அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை அப்போது மேற்கொண்டிருந்தது.

தமிழக அரசு: குறிப்பாக, அடுக்குமாடி கட்டிடங்களில் தமிழக அரசின் கவனம் அதிகரித்தது.. அத்துடன், கடந்த 2021ம் ஆண்டு, தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் சிதிலமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்திருந்தார்.. இந்நிலையில், பழைய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மறுசீரமைப்பிலும் தமிழக அரசு தற்போதும் கவனம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+