சிதைந்த பழைய பிறப்புச் சான்றிதழ் இனி கவலை வேண்டாம்.. ஆன்லைனில் நகல் எடுப்பது ஈஸி! முழு விவரம்
சென்னை: காணாமல் போன பிறப்புச் சான்றிதழை மீண்டும் பெறுவதற்கான எளிய நடைமுறைகள் வந்துவிட்டன. ஆனால், சிலருக்கு அந்த நடைமுறைகள் தெரியாமல் இருக்கலாம்.. அதேபோல, வெளிநாட்டில் பிறக்கும் இந்தியக் குழந்தைகளுக்கான அதிகாரப்பூர்வ பதிவு முறைகள் குறித்தும் அறியாமல் இருக்கலாம்.. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் அடிப்படை அடையாள ஆவணமாக திகழ்வது பிறப்புச் சான்றிதழ் மட்டுமே.. இது தற்செயலாக தொலைந்து போனாலோ அல்லது காலப்போக்கில் சிதைந்து போனாலோ பொதுமக்கள் எவ்வித பதற்றமும் அடையத் தேவையில்லை.

பழைய பிறப்பு சான்றிதழ்
பழைய சான்றிதழ் காணாமல் போனால், முதலில் அது எந்த உள்ளாட்சி அமைப்பில் அதாவது மாநகராட்சி, நகராட்சி அல்லது பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்..
அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் இதற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகள் மிக துல்லியமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.. நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று முறையான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்..
சான்றிதழ் தொலைந்ததற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டு, அதற்கான மிகக் குறைந்த தொகையிலான கட்டணத்தை செலுத்தினால் நகல் சான்றிதழை எளிதாக பெற முடியும்..
சிதைந்த பிறப்புச் சான்றிதழ் நகல்
இப்போது கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்ட பெரும்பாலான சான்றிதழ்கள் அனைத்தும் முழுமையாகக் ஆன்லைன் மயமாக்கப்பட்டுவிட்டன.. இதனால் வெப்சைட் வாயிலாகவே ஒருவருடைய பிறப்பு விவரங்களைத் தேடி எடுத்து, சில நிமிடங்களிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளும் அதிநவீன வசதியும் நடைமுறையில் உள்ளது.. ஒருவேளை மிக பழைய சான்றிதழ் என்றால் மட்டும், மேனுவல் பதிவேடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வழங்க சில நாட்கள் கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம்..
அதேபோல் பிழைப்பு தேடி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியத் தம்பதியருக்குக் குழந்தை பிறந்தால், அந்தத் தகவலை ஒரு வருட காலத்திற்குள் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்வது சட்டப்படி மிகவும் கட்டாயமாகும்..
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
குழந்தை பிறந்த நாட்டின் மருத்துவமனை வழங்கும் அதிகாரப்பூர்வ பிறப்புச் சான்றிதழை ஆதாரமாகக் கொண்டு, இந்திய தூதரகத்தின் இணையதளப் பக்கத்தில் முறையாக விண்ணப்பிக்க வேண்டும்..
இதற்காக குழந்தையின் பெற்றோர் இருவரும் இந்தியக் குடிமக்கள் என்பதை நிரூபிக்க அவர்களின் கடவுச்சீட்டு மற்றும் திருமண சான்றிதழ் உள்ளிட்ட அசல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.. தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட பிறகு வழங்கப்படும் அந்த பிறப்புச் சான்றிதழ், அந்தக் குழந்தைக்கு இந்தியக் குடியுரிமை பெறுவதற்கும் மற்றும் இந்திய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கும் மிக முக்கியமான அடிப்படையாக அமையும்.
இந்தத் தூதரக சான்றிதழ் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் சொத்து பரிமாற்றங்கள் போன்ற அனைத்து சட்டப்பூர்வ இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாகக் கருதப்படும்..
இந்தியத் தூதரக பதிவு
வெளிநாட்டில் குழந்தை பிறந்திருந்தாலும், இந்தியத் தூதரக பதிவு என்பது அந்தக் குழந்தையை இந்தியக் குடிமகனாக உலக அளவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறது..
அதனால் ஆவணங்களை சரியாக பராமரிப்பதும், உரிய நேரத்தில் பதிவு செய்வதும் வருங்காலச் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.. தொலைந்த சான்றிதழை பெறுவதற்கும், புதிய பதிவுகளை மிக எளிதாக மேற்கொள்வதற்கும் அரசு இப்போது எளிய டிஜிட்டல் வழிமுறைகளை உருவாக்கி உள்ளதால் பாமர மக்களும் எந்தவிமான சிரமமுமின்றி இதனை அணுகி பயன்பெற முடியும்..!!












Click it and Unblock the Notifications