Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்துக்களே குறி! நில வணிகத்தில் குண்டர்கள்? ரியல் எஸ்டேட்டில் பாதுகாப்பு தேவை: முதல்வரிடம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில் முனைவோர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, தொழிலதிபர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக பெயிரா கவலை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கள் பாதுகாப்பில், அரசு மேல் நம்பிக்கை கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும், தொழில்முனைவோர்களின் உயிருக்கும், உடைமைக்கும் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வரிடம் பெயிரா வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கடந்த 1ம் தேதி, சென்னை பள்ளிக்கரணையில் கீர்த்தி புரமோட்டர்ஸ் எனும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் கமலஹாசன் என்பவரை, சில சமூக விரோதிகள் அவரது அலுவலகத்தில் வைத்தே சரமாரியாக அடித்து, கொலைவெறி தாக்குதல் நடத்தியிருந்த சம்பவம், மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

properties real estate

கோரிக்கை: இந்த சம்பவமானது, தமிழகத்தில் தொழில் தொடங்கிய மற்றும் தொடங்க நினைக்கும் தொழில் அதிபர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு, முக்கிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஹென்றி எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

"தமிழ்நாட்டில் சமீபகாலமாக பெரும்பாலான நில வணிகத்தில் (ரியல் எஸ்டேட் தொழிலில்) சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குண்டர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. யாருக்கு நிலங்களை விற்க வேண்டும் என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பது தொடங்கி அது சம்பந்தப்பட்ட அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல் பின்புலம் கொண்ட ஒரு சில குண்டர்களின் கையில் தான் உள்ளது.

கொலைவெறி தாக்குதல்: இதற்கு சம்மதிக்க மறுக்கும் நில உரிமையாளர்கள் மிரட்டப்படுவதுடன் கொலைவெறி தாக்குதலுக்கும் ஆளாகி, அவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும், மேலும் அவர்களது சொத்துக்களை சேதப்படுத்துவது கபளீகரம் செய்வது, சூறையாடுவது, அபகரிப்பது போன்ற சம்பவங்களும், ரியல் எஸ்டேட் கொலைகளும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் வீடு விற்பனை சம்பந்தமாக, கமலஹாசன் என்பவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பெயிரா கூட்டமைப்பில் 7வது குழுவின் மாநில பொருளாளராக அங்கம் வகித்து வரும் A.கமலஹாசன், பள்ளிக்கரணையில் எண்:8B, காமகோட்டி நகர், பள்ளிக்கரணை, சென்னை-600100 என்கின்ற விலாசத்தில், "கீர்த்தி முருகாஸ்" எனும் இரண்டு தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் Flat No:F2-வில் கீர்த்தி புரமோட்டர்ஸ் எனும் கட்டுமான நிறுவனத்தை கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

விற்பனை: மேலும் மேற்குறிப்பிட்ட விலாசத்தில் அமைந்துள்ள கீர்த்தி முருகாஸ் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் முறையே S1, S2, & S3 என மூன்று வீடுகள் (Flats) உள்ளன. அதில் Flat No: S2 என்கின்ற வீட்டினை ரம்யா சுதர்சன் என்பவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை நாட்டினை சேர்ந்த செல்வகுமார் என்பவர் Flat No:S2 வீட்டிற்கு ரம்யா சுதர்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டினை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வாடகைக்கு குடி வந்துள்ளார். மேலும் தான் குடியிருந்து வரும் Flat No:S2 வீட்டினை அவர் வாங்குவதற்கும் முயன்று அதற்கான பணத்தையும் தவணை முறையில் செலுத்தி வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவரிடத்திலும் தான் இந்த வீட்டின் உரிமையாளர் என்று கூறி வந்துள்ளார்.

பணமோசடி: மேலும் செல்வகுமார் என்பவர் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இவர் மீது ஏற்கனவே பல பேரிடம் பண மோசடி, அடிதடி, சொத்துகளை அபகரித்தல், ஆள்மாறாட்டம், கட்டப் பஞ்சாயத்தென பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களிலும் மற்றும் காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது. இரண்டாவது தளத்தில் உள்ள S3 வீட்டை விற்பனை செய்து தரக்கோரி A.கமலஹாசனுக்கு பொது அதிகார ஆவணம் பதிவு செய்து கொடுத்துள்ள நிலையில், நல்ல நண்பர்களாக பார்த்து தன்னுடைய வீட்டை விற்று தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் Flat No: S1 எண் கொண்ட வீட்டினை வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவருக்கு கமலஹாசன் விற்பனை செய்ததை கேள்விப்பட்ட செல்வகுமார், நான் வாடகைக்கு கேட்ட போது தராமல் என்னை கேட்காமல் மேற்கண்ட வீட்டினை நீ எப்படி விற்பனை செய்தாய் என்று மிக ஆவேசமாக பேசி கொலை வெறியோடு கமலஹாசன் தாக்க முற்பட்டுள்ளார். S3 வீட்டினை வேறு யாருக்கும் வாடகைக்கோ அல்லது விற்கவோ செய்தால் நீ உயிரோடு இருக்க மாட்டாய் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்

ஆபாச வார்த்தைகள்: கடந்த 1ம்தேதி புத்தாண்டு தினத்தன்று, கமலஹாசனை அவர்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, மொட்டை மாடியில் நான் ரூப் சீட் போட்டால் உனக்கென்ன என்று கூறி, செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளி தமிழ்ச்செல்வன் மற்றும் பெயர் தெரியாத ஐந்து பேர் சேர்ந்து கொலை செய்யும் நோக்கத்தோடு அவரை கண்மூடித்தனமாக முகம், தலை, தாடை, கழுத்து, நெஞ்சு, கண், காது என எல்லா இடத்திலும் கண்மூடித்தனமாக அடித்தும், உதைத்தும், முகத்தில் குத்தியும் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், நிலைகுலைந்து மயங்கி விழுந்த கமல்ஹாசன், 108 ஆம்புலன்ஸில் மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை தரப்பட்ட நிலையில், உடலில் ஏற்பட்ட அதிகளவு காயங்கள் காரணமாக, பள்ளிக்கரணை காமாட்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவு: இதனிடையே, Flat No:S3 வீட்டினை வாங்குவதற்காக பார்வையிட வந்த வாடிக்கையாளர்கள், கமலஹாசன் நடத்தப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதலையும், அவரது அலுவலகம் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டதையும் நேரில் பார்த்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குள் செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.

தகவலறிந்த T14 பள்ளிக்கரணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் P.ரவி, கமலஹாசனிடமிருந்து வாக்குமூலம் மற்றும் புகார்களை பெற்ற நிலையில், செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற முக்கிய நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

மேலும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் முன் ஜாமின் கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்கள். இந்த வழக்கானது 10.01.2025 அன்று செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்களின் அடிப்படையில் செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் செல்வகுமார் தனது அரசியல் செல்வாக்கு, பண பலம் மற்றும் ஆள் பலத்தை கொண்டு அவரும் அவரின் கூட்டாளிகளும் தாங்கள் செய்த இந்த கொடூர சம்பவத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பல வகையிலும் முயன்று வருவதாக தெரிகிறது. மேலும் செல்வகுமார் தான் ஈடுபடும் குற்றச் செயல்களிருந்து தன்னை காத்துக் கொள்ள எப்போதும் 25 வழக்கறிஞர்களை தன்னுடன் வைத்துள்ளார்.

எனவே தமிழ்நாடு முதல்வர், மேற்கூறிய கொலைவெறி தாக்குதல் சம்பவத்தை தங்களின் மேலான கவனத்தில் கொண்டு, யாராக இருந்தாலும் இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது அரசியல், மதம், ஜாதி மற்றும் பொருளாதார அடிப்படையில் பாரபட்சம் காட்டாமல் இரும்பு கரம் கொண்டு அவர்களை அடக்க வேண்டும் மேலும் இத்தகைய கொலை பாதக செயல்களை செய்தவர்கள் மீது கடுமையான சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க தாங்கள் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

சமூக விரோதிகள்: தமிழ்நாட்டில் பொதுமக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரும் பாதுகாப்பாக வாழும் வகையில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்திட வேண்டும்.. உடனடியாக தனிப்படை அமைத்து, சம்பந்தப்பட்ட குண்டர்களை கைது செய்து சிறையிலடைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கூறிய தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையானது உலகம் முழுவதிலும் இருந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்கள் தங்கள் பாதுகாப்பில் தமிழக அரசு மேல் நம்பிக்கை கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக தங்களை பணிவுடன் வேண்டுகின்றோம்" என டாக்டர் ஹென்றி தன்னுடைய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+