குடிபோதையில் டிரைவிங்.. லைசென்ஸும் இல்லை.. போலீஸாருடன் வாக்குவாதம் வேறு.. இது சரியா காயத்ரி!
போதையில் கார் ஓட்டியதாக காயத்ரி ரகுராம் மீது போலீசார் புகார் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: வாய் கிழிய பேசிய நடிகை காயத்ரி ரகுராம் போதையில் வண்டி ஓட்டி அசிங்கப்பட்டுள்ளார்.
டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் குடும்பமே கலைக்குடும்பம். கமல் உட்பட எல்லோருக்குமே நெருக்கம்தான். இன்னமும்கூட இந்த குடும்பத்தின் ஆளுமை திரையுலகில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ரகுராமின் மகள் காயத்ரி சில படங்களில் நடித்தார், பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
ஆனால் இவ்வளவு இருந்தாலும் தமிழக மக்களால் நன்கு அறியப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சியில்தான். பிக் பாஸ் வீட்டுக்குள் காயத்ரி பேசியது, நடந்துகொண்டது குறித்தெல்லாம் நிறைய விமர்சனங்கள் எழுந்தன. சில சமயம் கண்டன கணைகள் கூட விழுந்தன. இதனால் காயத்ரி மீதான எதிர்மறை முத்திரை அப்படியே தமிழக மக்களுக்கு பதிந்துவிட்டது.

பார்ட்டி
இந்த நிலையில் அடுத்து ஒரு சம்பவம் மேலும் அவரது நன்மதிப்பை குறைக்கும் வகையில் நடந்திருக்கிறது. சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் காயத்ரி சென்றிருக்கிறார். அங்கே ஒரு பார்ட்டி என்று போயிருக்கிறார். இதில் இவரை தவிர வேறு, நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர். பிறகு பார்ட்டி முடிந்து நடுராத்திரி 1 மணிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார் காயத்ரி.

லைசென்ஸ்
அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகில் வந்தபோது, அங்கே டிராபிக் போலீசார் நின்று கொண்டிருந்தார்கள். வழியில் வரும் வண்டிகளையும் சோதனை செய்து கொண்டிருந்தார்கள். வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி உள்ளே யார் என்று பார்த்தால் காயத்ரி இருந்தார். அப்போது அவரிடம் முதலில் லைசென்ஸ் கேட்டார்கள். அவர் இல்லை என்று சொல்லவும் வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது.

மது போதை
போலீசாருடன் வாயை திறந்து கத்தி சண்டை போட ஆரம்பித்தவுடன்தான் மது போதையில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தார்கள். அதன்பிறகு தண்ணி அடித்ததை பற்றி கேட்டதற்கு ஆமாம் என்று காயத்ரி ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, போதையில் காரை ஓட்டி வந்த காயத்ரியிடம் லைசென்ஸ் இல்லாததால் ஃபைன் கட்ட சொன்னார்கள்.

ரூ.3500 ஃபைன்
பின்னர் 3500 ரூபாயை அபராதமாக காயத்ரி கட்டினார். இதனையடுத்து, திரும்பவும் போதையிலேயே கார் ஓட்டி ஏதாவது விபத்து நடந்து விடப் போகிறது என்று நினைத்த போலீசார், வேறு ஒருவரை காரை ஓட்டி காயத்ரியை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் விட்டு விட சொன்னார்கள்.

வறுபட்டு வருகிறார்
அதன்படியே அந்நபரும் வீடு வரை காயத்ரியை பாதுகாப்பாக அழைத்து கொண்டு போய் சேர்த்தார். எந்த ட்விட்டரில் மக்களிடம் கருத்துக்களை கூறி வறுபட்டாரோ அதே மக்களிடம் மீண்டும் வறுபட ஆரம்பித்துள்ளார் காயத்ரி.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications