Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் கணவர் மரணம் தற்கொலை அல்ல.. இறப்புக்கு யார் காரணம்? டான்ஸர் ரமேஷின் மனைவி பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் சகவாசம் இருந்தது. அந்த பெண்தான் அவரை ஏதாவது செய்திருப்பார் என சந்தேகிக்கிறேன் என டான்சர் ரமேஷின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்களை போல் நடனமாடி பிரபலமானவர் ரமேஷ். இவர் டான்ஸர் ரமேஷ் என அழைக்கப்பட்டார்.

இவர் கே.பி. பார்க் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டடத்தின் 10 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவி பேட்டி

மனைவி பேட்டி

இதுகுறித்து டான்சர் ரமேஷின் மனைவி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், எனக்கு என் கணவர் இறந்துவிட்டதாக போன் வந்தது. நான் முதலில் நம்பவில்லை. என் அக்காவிடம் போனை கொடுத்தேன். அவரும் அதையேதான் சொன்னார். நாங்கள் உடனே சம்பவ இடத்திற்கு போனோம். அங்கு போலீஸாரிடம் என் கணவர் தூக்கிட்டு இறந்திருக்க மாட்டார். எனது கணவர் இறந்தது தற்கொலை மாதிரியெல்லாம் தெரியவில்லை. எனவே எனது கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கூறியுள்ளேன். அவராக இறந்துவிட்டாரா, இல்லை யாராவது அவரை கொன்றார்களா என்பது தெரியவேண்டும்.

ரூ 300

ரூ 300

அப்படி யாராவது கொன்றிருந்தால் அவர்களை கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். போன மாதம் 5ஆம் தேதி வீட்டை விட்டு போனார். ஒரு சாவு ஏற்பட்டது, அப்போது அவருக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து ஆட வைத்துவிட போகிறார்கள் என அச்சத்தால் அவரிடம் ரூ 300 கொடுத்து விட்டு வீட்டிலேயே இருங்கள் என கூறியிருந்தேன். அப்போதுதான் என் கணவரை கடைசியாக பார்த்தேன். அவருக்கு போன் செய்தால் ஸ்விட்ச் ஆப் என வருகிறது.

வேறு பெண்ணுடன் பழக்கம்

வேறு பெண்ணுடன் பழக்கம்

அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்தது. அவருடன் சென்றுவிட்டார். அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்து என் பேமிலி என போட்டு ஸ்டேட்டஸ் வைப்பார். இதை பார்த்த என் மருமகன் நீங்கள் அவரை எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டீர்கள். அவர் உங்களுக்கு துரோகம் செய்கிறாரே அவரை விட்டுவிடுங்கள் என்றார். நானும் அவரை விட்டுவிட்டேன்.

சந்தேகம்

சந்தேகம்


அந்த பெண் வீட்டில்தான் இறந்துள்ளார். எனவே அவர்கள் எதையோ செய்திருப்பார்கள் என சந்தேகிக்கிறேன். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை பார்த்தாலே பயப்படுவார். அந்த பெண்ணுக்கு ரவுடிகளுடன் சகவாசம் இருந்தது. பின்னர் எனது சின்ன மாமியார் சொன்னதன் பேரில் என் கணவரை ஏற்றுக் கொண்டு மீண்டும் வாழத் தொடங்கினேன். அண்மையில் ஒரு சாவு விழுந்தது. அப்போது டான்ஸ் ஆடச் சென்றவர்தான். அதன் பிறகு பார்க்கவில்லை.

ரூ 10 கூட கொடுத்ததில்லை

ரூ 10 கூட கொடுத்ததில்லை

அந்த பெண்ணை கைது செய்து வைத்துள்ளனர். சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு வரை அவர் எனக்கு ஒரு ரூ 10 கூட கொடுத்ததில்லை. நான்தான் அவருக்கு காசு கொடுப்பேன். அவருடன் பழக்கத்தில் இருந்த பெண், அவரை நன்கு குடிக்க வைத்தார். பின்னர் ரத்த வாந்தி எடுத்தார். அவரை நான்தான் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நார்மலாக்கினேன். நடிகைகள் சினேகா, சங்கீதா எல்லாம் என் கணவர் எப்படி இப்படி மாறியுள்ளார் என கேட்டனர். இப்போது துணிவு படத்திற்கும் ஜெயிலர் படத்திற்கும் ஷூட்டிங்கிற்கு நான்தான் அழைத்துச் சென்றேன். நானும் ஒரு டான்சர் , எனது மாஸ்டர் மூலம் அவரை சினிமா துறைக்கு அழைத்து சென்றேன். அண்மையில் கூட எனக்கும் என் கணவருக்கும் ஒரு பட வாய்ப்புக்காக ஆட்டிஷனுக்கு வர சொன்னார்கள். நான் அவர் என்னுடன் இல்லை என டைரக்டரிடம் சொல்லிவிட்டேன். டைரக்டரும் நாங்கள் எப்படியாவது ரமேஷை அழைத்துக் கொள்கிறோம் என்றார். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார் என கண்ணீர் மல்க மனைவி தெரிவித்தார்.

ரமேஷ் மாமியார் பேட்டி

ரமேஷ் மாமியார் பேட்டி

இதுகுறித்து ரமேஷின் மாமியார் கூறுகையில், எனது மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். அந்த பெண்ணுக்கு ரவுடிகளின் சகவாசம் இருக்கிறது. இதை எனது மருமகனே என்னிடம் சொல்லியிருக்கிறார். என்னை அம்மா என்றுதான் அழைப்பார். அந்த பெண்ணால் எனது மகளுக்கும் மருமகளுக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் என் காலில் விழுந்து, என்னை மனைவியுடன் சேர்த்து வைங்கள் என கேட்பார். சமீபத்தில் கூட அந்த பெண் என் மருமகனை ஆள் வைத்து அடித்ததாக என்னிடம் அழுது கொண்டே கூறினார் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+