ஊட்டியில் செம குளிரு.. திருடப் போன வீட்டில் திருடன் செய்த காரியம்! சிசிடிவியில் பார்த்து ஷாக் ஆன போலீஸ்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் திருடன் ஒருவன் சாவகாசமாக இருந்து திருடிவிட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டுக்குள் புகுந்த அந்த நபர் வீட்டின் பீரோவில் நகை, பணம் இருக்கிறதா என பார்த்துவிட்டு, பின்னர் குளிர் அதிகமாக இருந்ததால் அங்கேயே போர்வையை போர்த்தி தூங்கிவிட்டு, அதிகாலையில் எழுந்து மற்றொரு வீட்டின் முன்பு இருந்த மோட்டார் சைக்கிளை திருடிவிட்டு செல்கிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் அவரை கைது செய்ய விசாரித்து வருகிறார்கள்.
வீட்டின் உரிமையாளரான மருத்துவர் தன் மகளின் படிப்புக்காக பெங்களூர் சென்று இருக்கிறார். இதனால் அவரது வீட்டில் ஆள் யாரும் இல்லாததால், இதனை நோட்டமிட்டு அந்த நபர் கைவரிசை காட்டியிருக்கிறார். பெங்களூரில் இருந்து டாக்டர் வந்த பிறகு தான் திருடு போன பொருட்களின் விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத வீடு
நீலகிரி மாவட்டம் ஊட்டி பாட்னா ஹவுஸ் பகுதியில் பெண் டாக்டர் ஒருவரின் வீடு உள்ளது. இவரது மகள் பெங்களூரில் டாக்டராக பயிற்சி பெற்று வருகிறார். இவரது படிப்புக்காக தாய், தந்தை இருவரும் பெங்களூரில் மகளுடன் வசித்து வருகிறார்கள். இதனால் ஊட்டியில் உள்ள வீட்டில் யாரும் இல்லை. இந்த நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி பயிற்சி டாக்டர் தன் தோழிகளுடன் அந்த வீட்டில் வந்து தங்கினார்.
பின்னர் 23 ஆம் தேதி அன்று பெங்களூர் புறப்பட்டு சென்றுவிட்டார். இதனை அப்பகுதியில் சுற்றித் திரிந்த திருடன் ஒருவர் நோட்டமிட்டுள்ளான். வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்த அவர் 24 ஆம் தேதி இரவு 8 மணியளவில் வீட்டுக்குள் புகுந்துள்ளார். வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் நகை, பணம் இருக்கிறதா என்று பார்க்கிறார்.
ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் ஏறி
பின்னர் தான் கொண்டு வந்த பையில் சில பொருட்களை எடுத்து போடுகிறார். பின்னர் வீட்டில் இருந்த ஷோபாவில் போர்வையை போர்த்தி படுத்து தூங்கிவிட்டார். பின்னர் அதிகாலையில் 3 மணியளவில் எழுந்து, அருகில் உள்ள வீடுகளை நோட்டமிட்டார். இதில் பக்கத்து வீட்டில் இருந்த ஒருவரது மோட்டார் சைக்கிளை திருடிவிட்டு சென்றார். பின்னர் மீண்டும் அங்கு வந்த அவர் மோட்டார் சைக்கிள் சாவி இருக்கிறதா என்று தேடுகிறார்.
பின்னர் வேறு எந்த வீட்டிலும் நுழைய முடியுமா என ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் ஏறிச் செல்லும் வீடியோ காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக இளைஞர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் தான் போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சி கேமராக்களை ஆய்வு செய்த போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போலீசார் தீவிர விசாரணை
அந்த இளைஞர் பல வீடுகளுக்கு மாடி வழியாக ஏறி செல்வதும், டாக்டரின் வீட்டில் கதவை உடைத்து வீட்டுக்குள் செல்வதும், இருசக்கர வாகனத்தை திருடி செல்வதுமான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அந்த திருடனை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரில் இருக்கும் டாக்டர் வந்த பிறகு தான், அவர் எவ்வளவு நகை, பணத்தை திருடிச்சென்றார் என்பது தெரியும் என போலீசார் கூறினர்.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications