மாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்!
சொத்துக்காக மாமியாரை கடத்திய மருமகள் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: மாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது எல்லாம் அந்த காலம்.. ஒரு பிரச்சனை என்றால், இப்பவெல்லாம் உடனே கிட்னாதான்.. மருமகள் ஒருவர் மாமியாரை கடத்தி கொண்டு போய், அடைத்து வைத்து சித்ரவதையே செய்துள்ளார்!
சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி. 70 வயதான இவருக்கு, செந்தில், ராஜு என, 2 மகள்கள் உள்ளனர்.
2 மகன்களுக்கும் கல்யாணமாகி தனித்தனியே படப்பையில் வசிக்கின்றனர். ஆனால், சொத்து சம்பந்தமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

சரஸ்வதி
எப்ப பார்த்தாலும் மகன்கள் சொத்துக்காக மகன்கள் சண்டை போடுவதை தாங்கி கொள்ள முடியாத பத்மினி, 2 நாளைக்கு முன்பு தன்னுடைய அக்கா சரஸ்வதி வீட்டில் தங்கி இருந்தார். பத்மினிக்கும் அவரது மருமகள் மேனகாவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடத்தல்
இந்த நிலையில் நேற்று முன் தினம் சாயங்காலம் செந்தில் மனைவி மேனகா அந்த வீட்டிற்கு வந்தார்.. தன்னுடைய காரில் மாமியார் பத்மினியை ஏற்றி கடத்தி கொண்டு போய்விட்டார். அந்த காரில் ஒரு இளைஞரும் இருந்துள்ளார்.

விசாரணை
இதை பார்த்த அங்கிருந்த உறவினர்கள் உடனடியாக அயனாவரம் போலீசில் புகார் செய்யவும், போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பத்மினியை மீட்கவும் நடவடிக்கையில் இறங்கினார். அப்போதுதான், மருமகள் மேனகா, பத்மினியை திருநின்றவூர் அருகே தனது சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது தெரிய வந்தது.

சிக்கினார்
போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர் என்று தெரிந்ததுமே பெரும்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மாமியாரை கடத்தி அலைக்கழித்துள்ளார். கடைசியில் அயனாவரம் வீட்டுக்கே மாமியாரை கொண்டு வந்து விடும் சமயத்தில்தான், போலீசாரிடம் வசமாக சிக்கினார் மேனகா.

கைது
இதையடுத்து, மாமியாரை கடத்தி சென்ற மேனகாவையும் கைது செய்துள்ளனர். ரூ.4 கோடி சொத்தக்களை தனது பெயருக்கு மாற்றுவதற்காக மேனகா கடத்தி சென்றதும், இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் ராஜேஷ்கண்ணா என்ற இளைஞருக்கும் தொடர்பு உள்ளது என்பதும் தெரியவந்துள்ளதால் விசாரணை தொடர்கிறது. சொத்துக்காக மாமியாரை கடத்தி சித்ரவதை செய்த இந்த பாசக்கார மருமகள்தான் இப்போது சென்னையின் ஹாட் டாப்பிக் நியூஸ்!
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications