‛‛400 சவரன் நகை வேணும்’’.. மருமகளை துன்புறுத்திய சோழிங்கநல்லூர் அதிமுக மாஜி எம்எல்ஏ? பரபர புகார்
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபி கந்தன் மற்றும் அவரது மகன் சதீஷ் குமார் ஆகியோர் மீது மருமகள் வரதட்சணை புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அருகே சோழிங்கநல்லூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கேபி கந்தன். இவர் கடந்த 2011ம் ஆண்டு சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் கேபி கந்தன் போட்டியிட்டார்.

அதிமுக சார்பில் சோழிங்நல்லூர் தொகுதியில் கேபி கந்தன் போட்டியிட்டார். ஆனால் இந்த முறை கேபி கந்தன் வெற்றி பெறவில்லை. திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷிடம் அவர் தோற்றார்.
இந்நிலையில் தான் கேபி கந்தன் மீது அவரது மருமகள் பரபரப்பான வரதட்சணை புகார் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கேபி கந்தனின் மகன் பெயர் சதீஷ் குமார். இவருக்கு கடந்த 2018 ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் ஸ்ருதி பிரியதர்ஷினி. இவர் டாக்டராக உள்ளார். திருமணம் ஆன புதிதில் சதீஷ் குமார் - ஸ்ருதி பிரியதர்ஷினி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அதன்பிறகு பிரச்சனை வர தொடங்கி உள்ளது.
ஸ்ருதி பிரியதர்ஷினிடம் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கூடுதலாக வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஸ்ருதி பிரியதர்ஷினி தற்போது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது:
திருமணத்தின்போது 1000 சவரன் நகை கேட்டனர். 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்பிலான 2 கார்கள், 20 கிலோ வெள்ளி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் 400 சவரன் நகை கேட்டு மாமனார் கேபி கந்தன், கணவர் சதீஷ் குமார் கொடுமைப்படுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஸ்ருதி பிரியதர்ஷினியின் தந்தை கூறுகையில், ‛‛கேபி கந்தன், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் என மகளை அடித்து துன்புறுத்தி வரதட்சணை கேட்கின்றனர். பெண் குழந்தை பிறந்த பிறகு 2021ல் மகளை குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தினர். சமாதானம் பேச சென்ற என்னிடம் 500 பவுன் நகை, ரூ.1 கோடி கேட்கின்றனர். மகள் மருத்துவம் படித்தபோது எடுத்த போட்டோக்களில் தவறாக சித்தரித்து அவதூறு பரப்புகின்றனர்'' என்றார். இந்த புகாரை தொடர்ந்த போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications