கண்ணை மறைத்த ஆத்திரம்.. பாய் பிரன்ட்டை வைத்து மாமியாரிடம் நகை கொள்ளை.. மருமகள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியாரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மருமகளை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் இரண்டே மணி நேரத்தில் போலீஸார் கைது செய்தனர்.

ஆவடியை அடுத்த அண்ணனூர் தேவி நகர், சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவரது மனைவி லதா என்கிற மோகனசுந்தரி (30). இவர்களுடன் வினோத்குமாரின் தாயார் லலிதா (60) வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வினோத்குமார் வேலைக்கு சென்றுவிட்ட பிறகு மோகனசுந்தரி வீட்டிலிருந்து மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் லலிதா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

லலிதாவின் தங்கசங்கிலி

லலிதாவின் தங்கசங்கிலி

அப்போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் வந்து லலிதாவின் கழுத்திலிருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து மருமகள் மோகனசுந்தரி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இரு சக்கர வாகனம்

இரு சக்கர வாகனம்

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில்,மோகனசுந்தரி வீட்டின் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் ஒருவரை இறக்கிவிட்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில், மோகனசுந்தரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதற்கும் தனக்கும் தொடர்பு உண்டு என்பதை ஒப்புக் கொண்டார்.

மருத்துவச் செலவு

மருத்துவச் செலவு

இதுகுறித்து அவர் கூறுகையில் " தங்கையின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைபட்டது. இதற்காக மோகனசுந்தரி, மாமியார் லலிதாவிடம் இருந்து நகைகளை வாங்கி அடகு வைத்து மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்துள்ளார். இதன் பிறகு, லலிதா நகைகளை உடனடியாக மீட்டு தருமாறு மோகனசுந்தரிக்கு டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

 பணத்தை புரட்டி மீட்ட சம்பவம்

பணத்தை புரட்டி மீட்ட சம்பவம்

இதனையடுத்து, மோகனசுந்தரியும் பணத்தை புரட்டி அடகு கடையில் இருந்து நகையை மீட்டு லலிதாவிடம் கொடுத்துள்ளார். அதிலிருந்து மாமியார் லலிதா மீது மருமகள் மோகனசுந்தரிக்கு ஆத்திரம் இருந்ததாக தெரிகிறது. மேலும், அவரை பழிவாங்க வேண்டும் என மருமகள் திட்டம் தீட்டியுள்ளார்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு

இதனையடுத்து, ஆவடியை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தனது பள்ளித் தோழரான கார்த்திகேயன் (32) என்பவரது உதவியை நாடியுள்ளார். பின்னர், அவர் கார்த்திகேயனிடம் மாமியார் அணிந்திருந்த நகையை பறித்து என்னிடம் தருமாறு கூறியுள்ளார். இதற்கு கார்த்திகேயனும் ஒப்புக் கொண்டு உள்ளார்.

3 சவரன் சங்கிலி

3 சவரன் சங்கிலி

இந்நிலையில், நேற்று முன் தினம் மோகனசுந்தரி, கார்த்திகேயனை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு வீட்டு அருகில் விட்டு விட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு, கார்த்திகேயன் வீட்டுக்குள் சென்று லலிதாவிடம் இருந்து 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி உள்ளார். அந்த தங்கச்சங்கிலியை மோகனசுந்தரியிடம் கொடுத்து விட்டு சென்றது தெரியவந்தது.

ஆண் நண்பரை தேடும் போலீஸ்

ஆண் நண்பரை தேடும் போலீஸ்

இதனை அடுத்து, மோகனசுந்தரியை இரண்டு மணி நேரத்தில் கைது செய்த போலீசார் 3 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர். நகையை திருப்பி கேட்ட ஆத்திரத்தில் மாமியாரின் நகைகளை மருமகள் ஆள் வைத்து கொள்ளையடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+