சென்னை டூ தென்காசிக்கு பகல் நேர சிறப்பு ரயில்.. எந்தெந்த தேதிகளில்? தென் மாவட்ட பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு அதிவேக சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த சேவையானது இயக்கப்படுகிறது. பகல் நேரத்தில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதே போன்று சென்னை தாம்பரம் - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த கோடை கால சிறப்பு ரயிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 10 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் அனைத்துமே ஹவுஸ் புல் ஆகவே சென்று வருவதை பார்க்க முடியும். கல்வி, மருத்துவம், தொழில், வியாபாரம், வேலை என பல்வேறு காரணங்களுக்காக தென் மாவடங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு வந்து செல்கிறார்கள்.

special train from Chennai to Tenkasi - on which dates A pleasant surp

தென்காசி - தாம்பரம் சிறப்பு ரயில்

இதனால், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய உடனேயே பெரும்பாலும் அனைத்து டிக்கெட்டுகளும் புக் ஆகிவிடுகின்றன. இதனால், அவ்வப்போது பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் விடப்படும் ரயில்களும் பயணிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் தெற்கு ரயில்வே சென்னை தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. பகல் நேரத்தில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரயிலானது வாரத்திற்கு இரண்டு நாட்கள் இயக்கப்படுகின்றன. வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 5 மணிக்கு இந்த ரயில் புறப்படும்.

செங்கல்பட்டு (காலை 5.25 மணி), விழுப்புரம் (07.10), திருச்சி (9.25), திண்டுக்கல் (10.38), மதுரை (11.50), விருதுநகர் (12.38), சிவகாசி (1.03), ராஜபாளையம் (1.45), சங்கரன் கோவில் (2.13) தென்காசிக்கு மாலை 3.30 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் எப்போது புறப்படும்?

மறுமார்க்கத்தில் தென்காசியில் காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக மதுரைக்கு காலை 7.35 மணிக்கு சென்றடையும். மதுரையில் இருந்து 7.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல் (8.58), திருச்சி (10.10), விழுப்புரம் (12.25), செங்கல்பட்டு (2.00) வழியாக தாம்பரத்திற்கு 3.15 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகள் மட்டும் இயக்கப்படும்.

கட்டணம் எவ்வளவு?

இந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு ரூ.230, செக்கண்ட் சிட்டிங் ரூ.260, ஏசி சேர் கார் ரூ.1065, மூன்றாம் வகுப்பு ஏசி படுக்கை ரூ.1,330 கட்டணம் வசூலிக்கப்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே இயக்கும் இந்த சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம் - தூத்துக்குடி சிறப்பு ரயில்

அதேபோல, சென்னை தாம்பரம் - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த கோடை கால சிறப்பு ரயிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திங்கள் கிழமை இரவு 11.30 மணிக்கு தூத்துக்குடியில் புறப்பட்டு சென்னைக்கு செவ்வாய்க்கிழமை 12.30 மணிக்கு வந்தடையும். செவ்வாய்க்கிழமைகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும். தூத்துக்குடிக்கு அதிகாலை 4.30 மணிக்கு சென்றடையும். இந்த ரயில், சென்னை தாம்பரத்தில் இருந்து திங்கள் கிழமை தோறும் இந்த மாதம் முழுக்க இயக்கப்படும். மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+