திசை திருப்புவார்கள்.. திருப்பித் திட்டுவதை விட.. கொரோனாவை வேரறுப்பதே முக்கியம்.. தலைவர்களே கவனம்!
சென்னை: ஆளும் கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகளே வெகுவாக பாராட்டும் அளவுக்கு தமிழகத்தில் ஒவ்வொரு செயலும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு அபூர்வமான சூழல் தமிழகத்தில் இதுவரை வந்ததில்லை என்று கூட சொல்லலாம்.
கொரோனா ஒழிப்புப் போரில் முதல்வர் முதல்வர் கடைக்கோடி எம்பி எம்எல்ஏக்கல் வரை அத்தனை பேரும் தீவிரமாக உழைத்து வருகின்றனர். அதிகாரிகளும், ஆட்சியாளர்களுமாக சேர்ந்து மக்களுக்காக ஓடிக் கொண்டுள்ளனர். யாருக்கும் நிற்க கூட நேரமில்லை.
ஒருபக்கம் நோயாளிகள் கொத்துக் கொத்தாக குவிந்து வந்தாலும்.. முடிந்தவரை ஏதாவது நல்லது செய்து விட வேண்டும் என்ற வேட்கையுடன் அரசு நிர்வாகம் போராடிக் கொண்டுள்ளது. இப்படி ஒவ்வொரு வகையிலும் அரசு நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

திசை திருப்பும் செயல்
ஆனால் இப்படியே போனால் பிறகு "அவர்களுக்கு" என்ன மரியாதை.. அவர்களின் "நிபுணத்துவத்திற்கு" என்ன மரியாதை.. அதனால் திசை திருப்பல்களை கையில் எடுத்துள்ளன். திரித்து விடப் பார்க்கின்றனர்.. என்னைப் பாருங்கள்.. அந்தப் பக்கம் பார்க்காதீர்கள்.. அவர்கள் செய்வதைப் பார்க்காதீர்கள்.. அவர்களைப் பாராட்டாதீர்கள்.. அவர்களின் நல்ல செயல்களைக் கண்டு நெகிழாதீர்கள் என்பதே இதன் அர்த்தம்.

அவர்களின் நோக்கம்
"அவர்களது" நோக்கம்.. நல்லது நடக்கிறது என்று மக்கள் மெய் சிலிர்த்துப் போய் விடக் கூடாது.. மாறாக, நாம் செய்யும் திருகு வேலைகளில் அவர்கள் கோபப்பட்டு ஏதாவது வார்த்தையை உதிர்த்தால்.. அதை வைத்து திசை திருப்ப வேண்டும் என்பதே.. இதுவே "அவர்களின்" ஒற்றை அஜன்டா.. இந்த விஷயத்தில் அவர்கள் கில்லாடிகள். அகில இந்தியா முழுவதும் நிரூபிக்கப்பட்ட வெற்றிகரமான பார்முலாவும் கூட. இதைத்தான் தற்போது கையில் எடுத்துள்ளனர்.

அஜென்டா இதுதான்
அதைத்தான் தற்போது சில நாட்களாக தமிழகம் கண்டு வருகிறது. ஊடகங்கள் சிலவும் கூட அதற்கு உடந்தை என்று கூட சொல்லலாம். காரணம், எதைக் கேட்க வேண்டுமோ அதை விட்டு விட்டு குறிப்பிட்ட "இதை" அவர்கள் துருவித் துருவி கேட்கிறார்கள் என்றால் அஜென்டாக்களின் மாயாஜாலத்தை நாம் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

சர்ச்சைகள் வேண்டும்
மக்களைத் திசை திருப்ப வேண்டும். மக்கள் குழம்ப வேண்டும்.. புதிய சர்ச்சைகள் பின்னால் திரள வேண்டும்.. எது லைம்லைட்டில் இருக்க வேண்டுமோ அதைத் தூக்கிப் போட்டு விட்டு உருப்படாத, உப்புச் சப்பில்லாத, ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவை மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

ஒரே குறி.. நோ வெறி!
கொரோனா போரில் ஈடுபட்டுள்ள தலைவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு அட்வைஸ்தான்.. உங்கள் தலைவரைப் போல ஒரே இலக்குடன் முன்னேறிச் செல்லுங்கள்.. அவர் வாங்காத திட்டா.. பார்க்காத அவமானமா.. திருப்பித் திட்டிக் கொண்டா இருந்தார்.. "கேட்ட வீட்டையே" கொடுத்தாரே!.. ஒரு வீரன் போர்க்களத்தில் வெற்றியை மட்டுமே "குறி" வைத்து வீறு கொண்டெழுந்து விரைவான்.. வேறு எந்த "வெறி"யும் அவனது பார்வையில் படாது.. அதுதான் இப்போது நமது தலைவர்களுக்கும் அவசியம்.. அவசரமும் கூட.. காரணம் மக்கள் தவித்துக் கொண்டுள்ளனர்.. அவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications