அகவிலைப்படி உயர்வு.. இன்று வெளியாகிறது அறிவிப்பு.. சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா? பின்னணி
சென்னை: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) அதிகரிப்பது குறித்த பெரிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்கிறார்கள்.
மத்திய அரசு வழக்கமாக ஆண்டுக்கு இரண்டு முறை.. அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் DA வை அதிகரிக்கும். . இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு இதன் மூலம் வருமானம் அதிகரிக்க உள்ளது.

DA இல் 3- 4% உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரடி பலனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 8வது ஊதியக் குழுவை அமைக்காதது பலருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில்தான் அரசு ஊழியர்களின் கோபத்தை போக்கும் விதமாக விரைவில் டிஏ உயர்வு அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
எவ்வளவு இருக்கும்?: DA அதிகரிப்புக்கான தேதியை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நாளை அந்த அறிவிப்பு வரலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. DA 3- 4% உயர்ந்தால், அது 53 அல்லது 54% ஆக அதிகரிக்கும் , இது தற்போதைய 50% இல் இருந்து குறிப்பிடத்தக்க உயர்வு ஆகும், இது மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு பயனளிக்கும்.
சம்பளம் எப்படி இருக்கும்?: உதாரணமாக, ஒருவர் மாதம் ₹50,000 சம்பாதித்தால், அவர் ஒவ்வொரு மாதமும் ₹1,500 அதிகமாகப் பெறுவார். அதாவது 51500 ரூபாய் சம்பளம் பெறுவார். இன்று இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் ஆண்டுக்கு இரண்டு முறை DA திருத்தம் செய்யப்படுகிறது, DA விகிதங்கள் பொதுவாக ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 அன்று அமலுக்கு வரும். DA உயர்வு இப்போது நடந்தால், அது ஜூலை 1, 2024 முதல் கணக்கில் எடுக்கப்படும். கடைசி DA திருத்தம் மார்ச் மாதம் செயல்படுத்தப்பட்டது, ஜனவரி 1, 2024 முதல் அது கணக்கில் கொள்ளப்பட்டது.
நிலுவை வராது: ஏற்கனவே அகவிலைப்படி நிலுவை தொகையான 18 மாத தொகை வழங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் பிடிக்கப்பட்ட தொகை ஆகும் இது. இந்த தொகை கொரோனா காலத்தில் கொடுக்கப்படவில்லை. இதைத்தான் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த கோரிக்கை இந்த முறை நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை. இருப்பினும் வரவிருக்கும் DA உயர்வை எதிர்பார்த்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். டிஏ அதிகரிப்பு, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நல்வாழ்வை மேலும் மேம்படுத்தும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பள உயர்வைக் கொண்டு வர உள்ளது.
பென்சன்: இது போக ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த பென்சன் திட்டத்திற்கு கீழ் பென்சன் மட்டுமன்றி அகவிலைப்படியும் சேர்ந்து வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications