அகவிலைப்படி + போனஸ் + 3 மாத அரியர்ஸ்.. நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு.. மத்திய அரசின் ஜாக்பாட்
சென்னை: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு இந்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது. மத்திய அரசாங்கம் தீபாவளிக்கு முன்னதாக 3% அகவிலைப்படியை (DA) உயர்த்தும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகவிலைப்படி உயர்வு என்பது 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். அக்டோபர் மாத ஊதியம் மற்றும் மூன்று மாத நிலுவைத் தொகையுடன் அதிகரிக்கப்பட்ட டி.ஏ வழங்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன.

பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படியை (DA) ஆண்டுக்கு இருமுறை மத்திய அரசு உயர்த்துவது வழக்கம். இருப்பினும், இது தொடர்பான அறிவிப்புகள் பொதுவாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும். ஜனவரி டிஏ உயர்வு பொதுவாக மார்ச் மாதத்தில் வரும். இது பொதுவாக ஹோலியை ஒட்டி அறிவிக்கப்படும், அதே சமயம் ஜூலை உயர்வு தீபாவளியை ஒட்டி அறிவிக்கப்படும், இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும்.
இந்த ஆண்டு, ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு கணிசமாக தாமதமாகி உள்ளது. அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் ஹரியானா தேர்தலுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்காததால், அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படும் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்று தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு முக்கிய பகுதியாகும், இது பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்கும் நோக்கம் கொண்டது. சில்லறை விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கும் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது.
எவ்வளவு அதிகரிக்கும்?: மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது DA 50% ஆக உள்ளது. இதை அரசு 3% உயர்த்தினால், ஜூலை 1, 2024 முதல் அகவிலைப்படி 53% ஆகலாம். இது மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.
தமிழ்நாடு: ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போனஸ் இந்த வாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் வங்கியில்.. போனஸ் தொகை செலுத்தப்படும்.
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 இன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான உச்சவரம்பு ரூ.21,000 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பமான ரூ.21,000 என்பதைத் தளர்த்தி அனைத்து C மற்றும் 'பிரிவு பணியாளர்களுக்கு 2023-24ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையினை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும். கபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்., என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications