இலவச செல்போன், ஆவின் பால் விலை குறைப்பு நிறைவேற்றினீர்களா.. ஸ்டாலின் கேள்வி
சென்னை: தமிழக சட்டசபையில் பொது மற்றும் வேளாண் துறைக்கான பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதம் வரும் 19ஆம்தேதி வரை நடைபெறுகிறது.
திமுக ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆன நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதாவது ஆகஸ்ட் 13 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 14-ஆம் தேதி வேளாண்துறைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து இன்று விவாதம் தொடங்கியது.
இந்த விவாதம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை நடைபெறும். இன்று விவாதம் தொடங்கிய நிலையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி வருகிறார். அவர் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு அதிமுக நிதி ஒதுக்கவில்லை. அதிமுக அரசு செயல்திறன் இல்லாமல் இருந்ததால் தான் கடன் அதிகரித்து இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இலவச செல்போன், ஆவின்பால் விலை குறைப்பு உள்ளிட்டவற்றை நிறைவேற்றினீர்களா என அதிமுகவுக்கு கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதியில் இருந்து என்னைக்கும் பின் வாங்க மாட்டோம். பயிர் கடனில் பல குளறுபடிகள் உள்ளன. அதை சரி செய்த பின்னர்தான் தள்ளுபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஸ்டாலின்.
Recommended Video
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications