‛‛பணியிடத்தில் ஊக்கத்தொகை’’.. விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை.. உதயநிதியின் 14 மேஜர் அறிவிப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் இன்று அமைச்சர் உதயநிதி நிர்வகித்து வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறைகள் சார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு கவனம் ஈர்த்தார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து துறை வாரியாக நடத்த வேண்டிய மானிய கோரிக்கை விவாதத்துக்காக கடந்த 20ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.

tamil nadu assembly udhayanidhi stalin

இந்த கூட்டத்தொடர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட துறைகள் வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இன்றும் பல்வேறு துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து பிற நாட்களில் சட்டசபை தொடர் நடந்து வருகிறது.

இன்று 7 வது நாளாக சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இன்றைய நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிர்வகிக்கும் துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. அதன்படி இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, கைத்தறி மற்றும் தணி நூல் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் காலையில் நடைபெற்றது.

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை சார்பில் 14 முக்கிய அறிவிப்புகளை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:

விளையாட்டு துறை: * சென்னை - கரூர் -மதுரை: * சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் உள்ள மாணவர் விடுதி ரூ.25 கோடி மதிப்பீட்டில் உயர் செயல்திறன் கொண்ட விடுதியாக மேம்படுத்தப்படும்.
* நுங்கம்பாக்கம், வேளச்சேரி, மேலக்கோட்டையூர் வளாகத்தில் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். மேலக்கோட்டையூரில் பேட்மிட்டன், சைக்கிளங், டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளும், நுங்கம்பாக்கத்தில் டென்னிஸ், வேளச்சேரியில் நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் Diving pool உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் அமைக்கப்படும். தென்தமிழகத்தை சேர்ந்த நீச்சல் வீரர்கள், வீராங்னைகள், சவர்தேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
* கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும்.
* 22 சட்டசபை தொகுதிகளில் ரூ.66 கோடியில் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும்.
* விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களும், விளையாட்டு அரங்களும் ரூ.50 கோடியில் சீரமைக்கப்படும்.

அரசு வேலை: * இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் நிறுவப்படும். மேலக்கோட்டையூர் அருகே எஸ்டிஏசி பிரத்யே ஒலிம்பிக் Bicycle Motocross ஓடுபாதை அமைக்கப்படும்.
* டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 33 விளையாட்டு உபகரஙண்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.
* சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்று வெற்றிப்பெறுபவர்களுக்கு அரசு பணி. 100 வீர், வீராங்கனைகளுக்கு 3 சதவீத விளையாட்டுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மறஅறும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி ஆணை வழங்கப்படும்.

திட்ட செயலாக்க துறை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையை போல் சிறப்பு திட்ட செயலாக்க துறையை பொறுத்தமட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:
* ரூ.1185 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மகளிருக்கு பயளனிக்கும் அனைத்து தகல்களை தரும் மகளிர் தகவல் வங்கி உருவாக்கப்படும். அரசு பள்ளிகளில் 8 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உளவியல் பரிசோதனை மூலம் திறமையை கண்டறிய திறமை மதிப்பீட்டு தளம் உருவாக்கப்படும். பள்ளிகளில் தொில் முனைவு குறித்த பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கு தொழில்துறை சார்ந்த பணியிட பயிற்சி அளிக்கப்படும்.

* சிகரம்தொடு திட்டம் மூலம் முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தன் மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 10000 மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு துறை சார்ந்த திறன் பயிற்சிகள், சிறந்த தொழி்முறை பயிற்றுநர்கள் மூலம் வழங்கப்படும்.
* நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் சார்ந்த படிப்புகள் வெற்றிக்ரமாக செயல்படுத்தப்படதை தொடர்ந்து, 45,00 மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணை மருத்துவ படிப்புகளுக்கு விரிவுப்படுத்தப்படும்.

* ரூ.100 கோடி மதிப்பீட்டில் திறன் தமிழ்நாடு நிறைப்பள்ளிகள் திட்டத்தின் மூலம் கல்லூரி பட்டப்படிப்பை முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு பட்டப்படிப்பு, தனித்திறன் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை அணுகுவதற்காக துவங்கப்படும். சிறந்த தொழில் நிறுவனங்கள் மூலம் முழு மற்றும் பகுதியளவு மானியத்துடன் திறன் ஓலைகள் (Skill Vouchers) பணியிடப்பயிற்சி(Internsip), திறன் ஊக்கத்தொகை வழங்கப்படும்’’ எனக்கூறினார்.

அதன்பிறகு மாலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியாகி வாய்ப்புள்ளது. இதில் காலையில் நடக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறைகளின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். இதனால் இன்றைய கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. ஏனென்றால் தமிழக சட்டசபையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். கேள்வி நேரத்தில் விவாதிக்க கூறியதால் அதற்கு சபாநாயகர் அப்பாவு ஏற்கவில்லை. இதனால் அதிமுகவினர் தொடர்ந்து கோஷமிட்ட நிலையில் நேற்று முன்தினம், நேற்று என்று 2 நாட்கள் சபாநாயகர் அப்பாவு உத்தரவை தொடர்ந்து சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து நேற்றைய தினம் சட்டசபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சட்டசபையின் மாண்பை கெடுக்கும் நோக்கத்திலும் செயல்பட்டதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து எம்எல்ஏக்களும் வரும் கூட்டத்தொடர் முழுவதும் சபை நடவடிக்கையில் பங்கேற்க முடியாத வகையில் சஸ்பெண்ட் செய்து அப்பாவு உத்தரவிட்டார். இதனால் அவர்கள் இன்றைய தினம் சட்டசபை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை. மாறாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி மற்றும் சட்டசபையில் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து அதிமுகவினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+