Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நீட்" பயிற்சி நிறுவனங்களின் முழுப்பக்க விளம்பரங்கள்- அச்சத்தின் பிடியில் ஆயிரம் ஆயிரம் அனிதாக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிந்துசமவெளி ஆய்வாளரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் இன்று தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள "நீட்" தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்களின் முழுப்பக்க விளம்பரங்கள். அச்சத்தின் பிடியில் ஆயிரம் ஆயிரம் அனிதாக்கள்" என்ற கருத்து பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு தர வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. இது தொடர்பான சட்டப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டு கிராமப்புற, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை பலி கொள்கிறது; நீட் தேர்வு என்பது மாநில பாடத்திட்டத்துக்கு தொடர்பே இல்லாத சிபிஎஸ்இ பாடத்தை அடிப்படையாகக் கொண்டதால் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைக்கிறது;
இதனாலேயே அரியலூர் அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்கள் தங்களை தாங்களே சாகடித்துக் கொண்ட கொடூரம் இந்த மண்ணில் நிகழ்ந்துள்ளது. இதனாலேயே தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்கிற குரல் வலுத்து இருக்கிறது.

Debates on Neet Coaching Centres Advts in Tamil Nadu

ஆனால் இதே தமிழ்நாட்டில்தான் இன்று நீட் தேர்வுக்கான பள்ளிகள், மையங்கள் என்ற பெயரில் நடுத்தர குடும்பங்களை, மன சிதைவுக்குள்ளாக்கப்பட்டவர்களாக ஒரு வணிகக் கும்பல் ஈவிரக்கமின்றி வேட்டையாடி வருகிறது. ஒட்டுமொத்த கல்விச் சூழலை காவு வாங்கிக் கொண்டு மருத்துவர் கனவை சுமக்கும் குடும்பங்களின் பொருளாதாரத்தையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது இந்த நீட் தேர்வுக்கான பள்ளிகள், மையங்கள் எனும் கும்பல்.

11-ம் வகுப்பு சேருகிற போதே, நீட் கனவை நிறைவேற்றக் கூடிய பள்ளி எங்கே இருக்கிறது என்கிற தேடலை தொடங்குகின்றனர் பெற்றோர்கள். குறிப்பாக நாமக்கல், ஈரோடு, கோவை என நீட் தேர்வு பள்ளிகள், மையங்கள் பிராய்லர் கோழி பண்ணைகளை போல குவிந்து கிடக்கும் பகுதிகள், இவற்றுடன் தொடர்பு உள்ள பள்ளிகள் என ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து சில லட்சங்களை 11-ம் வகுப்பிலேயே கொட்டி கொடுத்து மாணவர் சேர்க்கை பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைகள் சரியாகப் படிக்க வேண்டும் என்பதற்காக சொந்த வாழ்விடத்தை கைவிட்டு விட்டு அந்த பள்ளிக்கூடம் இருக்கும் ஊருக்கே சென்று குடியேறுகிற நிலைமையும் உருவாகி உள்ளது.

Debates on Neet Coaching Centres Advts in Tamil Nadu

இப்படி நீட் தேர்வை இலக்காக கொண்ட பள்ளிகள், அனைத்தும் பொதுத்தேர்வுகளை ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை. பொதுத் தேர்வு எழுதுவது, அதில் பாஸ் செய்வது, அதற்கான பாடத் திட்டங்களைப் படிக்க வைப்பது என்கிற இயல்பான கல்வி முறையை குழிதோண்டிப் புதைத்துவிட்டு இரவும் பகலும் நீட் தேர்வுக்கான தயாரிப்புதான் ஒற்றை இலக்காக வைத்திருக்கின்றன இந்த பள்ளிகள். பொதுத்தேர்வை ஒரு சடங்காக மட்டுமே மாணவர்கள் பார்க்க வேண்டும் என்கிற புதிய புத்தியைத் திணித்து இளம் மாணவர் சமூகத்தை பொது சமூகத்தில் இருந்து அன்னியப்படுத்தி வைத்திருக்கிற அவலம் இருக்கிறது.

ஆனால் நீட் தேர்வு பற்றி சிந்திக்கவே முடியாமல் பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என இன்னொரு பக்கம் குக்கிராமத்து பிள்ளைகள் கும்மிருட்டிலும் கிடைத்த லைட் வெளிச்சத்திலும் விடிய விடிய பள்ளிக்கூடப் பாடங்களை படிக்கின்றனர்; வீட்டில் வருமானம் போதாத நிலையில் அப்பன் ஆத்தாளுடன் சேர்ந்து உழைத்துவிட்டு கிடைக்கும் சொற்ப நேரத்திலாவது கல்விக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என வெறியுடன் போராடுகிறது பெரும்பான்மை சமூகம்.

இவர்களிடம் இருந்து நீட் எனும் தேர்வானது மருத்துவர் கனவில் மண்ணள்ளிப் போட்டு கபளீகரம் செய்து கொண்டு போய் லட்சாதிபதிகள், கோடீஸ்வரர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அநீதிக்கு எதிரான குரல்கள் தொடரத்தான் செய்கின்றன. ஆனால் சமூக அநீதிகளையே தங்களது சாசனம் என சொல்லுகிறவர்கள் கோலோச்சுகிற தேசத்தில் சமூக நீதியை யார்தான் எதிர்பார்க்க முடியும்?

Debates on Neet Coaching Centres Advts in Tamil Nadu

அதனால்தான் ஆர்.பாலகிருஷ்ணன் போன்ற சமூகவியல் அறிஞர்களே கொந்தளித்து போய், "நீட்" தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்களின்

முழுப்பக்க விளம்பரங்கள். அச்சத்தின் பிடியில் ஆயிரம் ஆயிரம் அனிதாக்கள்" பதறவும் கதறவும் வேண்டியுள்ளது என்கின்றனர் சமூக நீதியில் அக்கறை உள்ளவர்கள்.

ஆர்.பாலகிருஷ்ணனின் இந்தப் பதிவில் Vidhyasankari Manickavasagam என்ற பதிவர்,
அச்சம்,பீதி, விரக்தியின் பிடியில்...பள்ளிப் பருவத்தைக் காவு வாங்கும் இந்தத் தேர்வு முறையை ஏற்றுக் கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பதனால் பெற்றோர் மீது பிள்ளைகள் பிற்காலத்தில் வெறுப்பை உமிழப் போகின்றனர்! என கூறியுள்ளார்.

Debates on Neet Coaching Centres Advts in Tamil Nadu

Ruso Adhiyaman என்ற பதிவர், முதல் மதிப்பெண் பெற்ற மாணவரை பாராட்டும் மனம் இங்கே இல்லையாம். என்றொரு பிரச்சாரம் பரவலாக போய்கொண்டு இருக்கிறது. மேலும் நீட் வேண்டாம் என்றார்கள் இங்கே அரசியல் செய்வோர். ஆனால், நம் பிள்ளைகள் அதில் முதல் மதிப்பெண் பெற்று வேண்டாம் என்றோரின் முதத்தில் கரியை பூசியுள்ளார்களாம். அடிப்படை அறிவு அற்றோரும், சமத்துவத்தை விரும்பாதவர்களும், இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+