Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு வரும் ஜெயலலிதாவின் 28 கிலோ தங்கம், 800 கிலோ வெள்ளி நகைகள்.. அரசு எடுத்த பெரிய முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க சொத்துக்கள் மற்றும் நகைகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அவரது நகைகள் அரசு கருவூலத்தில் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத்தண்டனையுடன், தலா ரூ.10 கோடி அபராதம் விதித்தது.

Decision to auction jewelery to collect Rs 100 crore fine imposed on former Chief Minister Jayalalithaa

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாஇ சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேரும் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் , ஜெயலலிதா, சசிகா உள்பட 4 பேரையும் விடுவித்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா காலமானார். அதேநேரம் அடுத்த 2 மாதத்தில் அதாவது 2017 பிப்ரவரி மாதத்தில் உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக கூறிய உச்ச நீதிமன்றம், அபராத தொகையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியிருந்தது. ஜெயலலிதா இறந்து 7 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் அவருக்கான அபராத தொகை செலுத்தப்படவில்லை. இந்தநிலையில் அபராத தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளில் இப்போது நீதிமனறம் இறங்கியிருக்கிறது. அதன்படி, ஜெயலலிதாவின் சொத்துகளை விற்று அபராதத்தை கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ஜெயலலிதா வீட்டில் இருந்து 28 கிலோ நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள் - வைர நகைகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி இருந்தார்கள். இந்த நகைகள் எல்லாம் விசாரணையின் போது கர்நாடகா நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. அந்த நகைகளை ஏலம்விட்டு, அந்த தொகையில் அபராதத்தை செலுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்து.

அதன்படி, ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் மார்ச் 6, 7-ம் தேதிகளில் தமிழ்நாடு கொண்டு வரப்பட்டு, மாநில அரசின் உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், நகைகளின் மதிப்பு கணக்கிடப்பட்டு தற்போதைய மதிப்பின்படி பணம் திரட்டப்பட உள்ளது.

இதனிடையே இந்த நகைகள் மட்டுமே ரூ.40 கோடி ஏலம் போகும் என்றும், மீதமுள்ள ரூ.60 கோடிக்கு அவரது அசையா சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. இது ஒருபுறம் எனில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வழக்குக்கான கட்டணமாக ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு வழங்க வேண்டி உள்ளது. எனவே ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு அதன்மூலமாகவே அபராதம் மற்றும் வழக்கு கட்டணத்தை கட்டவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+