25 மாவட்டங்களில் வேகமாக குறையும் நோயாளிகள்.. உங்கள் மாவட்டத்தில் இன்றைக்கு என்ன பாதிப்பு.. விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 25 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழாக குறைந்துள்ளது. இன்று சென்னை, கோவை, கடலூர், சேலம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.

தமிழகத்தில் நேற்று 48,482 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 47,918 மட்டுமே நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 6,006 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 10879 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3631 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவதாக கடலூர் மாவட்டத்தில் 3491 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 2029 பேரும், செங்கல்பட்டில் 1983 பேரும் சேலத்தில் 1861 பேரும், திருவண்ணாமலையில் 1666 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆயிரத்திற்கு கீழ் பாதிப்பு

ஆயிரத்திற்கு கீழ் பாதிப்பு

25 மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெறுகிறார்கள். அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம். அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் உள்ளது.

200க்கும் அதிகம்

200க்கும் அதிகம்

தமிழகத்தில் செப்டம்பர் 11 ம் தேதி நிலவரப்படி மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை இப்போது பார்ப்போம். முன்பு தொற்று குறைவாக இருந்த கோவை, திருப்பூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது, தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இன்று 987 பேர் பாதிக்கப்பட்டுளளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 394 பேரும், திருவள்ளூரில் 312 பேரும், சேலத்தில் 298 பேரும், திருவண்ணாமலையில் 296 பேரும், கடலூரில் 289 பேரும், செங்கல்பட்டில் 297 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட ஏழு மாவட்டங்களில் 200க்கும மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

எங்கு பாதிப்பு

எங்கு பாதிப்பு

37 மாவட்டங்களில் 7 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் 200க்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூரில் 182 பேரும், திருவாரூரில் 153 பேரும், திருச்சியில் 140 பேரும், திருநெல்வேலியில் 136 பேரும், விழுப்புரத்தில் 161 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 114 பேரும், தஞ்சாவூரில் 145 பேரும், புதுக்கோட்டையில் 109 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூரில் குறைவான பாதிப்பு

பெரம்பலூரில் குறைவான பாதிப்பு

கள்ளக்குறிச்சியில் 147 பேரும், காஞ்சிபுரத்தில் 123 பேரும், கன்னியாகுமரியில் 123 பேரும் ராணிப்பேட்டையில் 92 பேரும், தேனியில் 85 பேரும், நீலகிரியில் 90 பேரும், திருப்பத்தூரில் 84 பேரும் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் 25 பேரும், அரியலூரில் 16 பேரும், தென்காசியில் 50 பேரும், நாகப்பட்டினத்தில் 48 பேரும், மதுரையில் 51 பேரும், கிருஷ்ணகிரியில் 39 பேரும் , பெரம்பலூரில் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+