தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகம், எந்த மாவட்டத்தில் நோயாளிகள் அதிகம்.. இன்றைய நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு 100க்கும் கீழாக குறைந்துள்ளது. அதேநேரம் இன்று சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், சேலம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.

தமிழகத்தில் நேற்று 46,806 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 46,633 பேர் மட்டுமே நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 5,768 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகம், எந்த மாவட்டத்தில் நோயாளிகள், எங்கு இன்றைக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது என்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் நோயாளிகள்

தமிழகத்தில் நோயாளிகள்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 9833 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3437 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவதாக கடலூர் மாவட்டத்தில் 2415 பேரும், சேலத்தில் 2220 பேரும், செங்கல்பட்டில் 2215
பேரும, திருவள்ளூர் மாவட்டத்தில் 2055 பேரும், திருப்பூரில் 1637 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எங்கு குறைவான பாதிப்பு

எங்கு குறைவான பாதிப்பு

23 மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெறுகிறார்கள். அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம். அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் உள்ளது.

மாவட்ட நிலவரம்

மாவட்ட நிலவரம்

தமிழகத்தில் செப்டம்பர் 16 ம் தேதி நிலவரப்படி மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இன்று 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 549 பேரும், செங்கல்பட்டில் 319 பேரும், திருவள்ளூரில் 282 பேரும், சேலத்தில் 280 பேரும், கடலூரில் 263 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட 6 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கு பாதிப்பு

எங்கு பாதிப்பு

அதேநேரம் 31 மாவட்டங்களில் தொற்ற பாதிப்பு 20க்கும் குறைவான நபர்களே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 156 பேரும், வேலூரில் 116 பேரும், திருவாரூரில் 139 பேரும், திருச்சியில் 98 பேரும், திருநெல்வேலியில் 118 பேரும், விழுப்புரத்தில் 142 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 120 பேரும், தஞ்சாவூரில் 138 பேரும், புதுக்கோட்டையில் 131 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூரில் 16 பேர்

பெரம்பலூரில் 16 பேர்

கள்ளக்குறிச்சியில் 162 பேரும், காஞ்சிபுரத்தில் 189 பேரும், கன்னியாகுமரியில் 114 பேரும் ராணிப்பேட்டையில் 96 பேரும், தேனியில் 50 பேரும், நீலகிரியில் 72 பேரும், திருப்பத்தூரில் 93 பேரும் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் 42 பேரும், அரியலூரில் 27 பேரும், தென்காசியில் 70 பேரும், நாகப்பட்டினத்தில் 71 பேரும், மதுரையில் 97 பேரும், கிருஷ்ணகிரியில் 68 பேரும் , பெரம்பலூரில் 16 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கு அதிகம்

எங்கு அதிகம்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 57 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8,559 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 14 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 5 பேரும், செங்கல்பட்டு மற்றும் கோவையில் தலா 4 பேரும் பலியாகி உள்ளனர். தஞ்சாவூர், தேனி,திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 2 பேர் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+