பத்திரப்பதிவு.. நீர் நிலைகளில் ஆவணப்பதிவு? அறநிலையத்துறைக்கு தமிழக பதிவுத்துறையின் மேஜர் வார்னிங்
சென்னை: பதிவுத்துறையில் இந்து அறநிலையத்துறை இடங்களை பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையில், பிழைகள், விதி மீறல்கள், சட்ட சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், பதிவு அலுவலர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதையொட்டி இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை கலந்த சுற்றறிக்கையை விடுத்திருக்கிறார்.. அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சதுப்புநில ஆவணங்கள்: "இந்து அறநிலையத்துறை, கலைமகள் சபா, பிஏசிஎல் தொடர்பான நிலங்கள், சொத்துகளை பதிவு செய்ய தடை உள்ளது. மேலும், வகிப்போருக்கு சொந்தமான ஆவணங்களின் பதிவு நடைமுறை, சதுப்புநில ஆவணங்களின் பதிவு தடை நடைமுறை, நீர்நிலைகளின் ஆவணப்பதிவு தடை குறித்தும் நீதிமன்ற உத்தரவுகள், தடையாணைகள் குறித்து விரிவாக பதிவு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மேற்காணும் நிலங்கள் தொடர்பான ஆவணப்பதிவுகள் நிகழாதவாறு தடுத்திட, கண்காணிக்க ஏதுவாக இத்துறையின் மென்பொருளில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
மென்பொருள்: சம்பந்தப்பட்ட பதிவாளர்கள் நிலையிலும், மாவட்டப்பதிவாளர், துணைப்பதிவுத்துறை தலைவர்கள் நிலையிலும், மேற்காணும் மென்பொருளில், உள்நுழைவில் அரசின் பொதுக் கொள்கைகளுக்கு எதிரானதும் மேலே பட்டியலிடப்பட்டதுமான சொத்துக்கள் தொடர்பான விவரங்களை தவறாது உள்ளீடு செய்து விழிப்புடன் பணியாற்றிட பதிவு அலுவலர்களுக்கு மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
இதை மீறுவதால் ஏற்படும் பிழைகள், விதி மீறல்கள், சட்ட சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், பதிவு அலுவலர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படுகின்றன. எனவே, மேற்கண்ட வழிமுறைகளை தவறாது பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது.
சிறப்பு தணிக்கை: தணிக்கை மாவட்டப் பதிவாளர்கள் தடை செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட மென்பொருள் தொகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சிறப்பு தணிக்கை மேற்கொண்டு தணிக்கை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கு தெரிவித்திட அறிவிக்கப்படுகிறது" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, நீர்நிலைகள் உள்பட ஒரு சில நிலங்களை பத்திர பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.. எனவே, தமிழகம் முழுவதுமுள்ள நீர்நிலைகள், உள் மற்றும் வெளி நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை தடுப்பதன் பொருட்டு ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் தரப்பில் அவ்வப்போது ஒன்றுகூடி முடிவெடுப்பது வழக்கம்..
வார்னிங்: அதன்படி, நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அதனைச் சார்ந்த அரசு புறம்போக்கு நிலங்களை எக்காரணம் கொண்டும் எந்த ஆவணப்பதிவும் மேற்கொள்ளக் கூடாது என்று பதிவு அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.. இதனை மீறி ஆவணங்கள் எதும் பதிவுசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலர், மாவட்ட பதிவாளர் மற்றும் துணை பதிவுத்துறை தலைவர் அதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள் என்றும் கடந்த காலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications