பத்திரம் பதியணுமா? ஆன்லைன் பத்திரங்களை அதே நாளில் பதிய வேண்டுமா? தமிழக பதிவுத்துறை அடுத்த அதிரடி
சென்னை: வருவாய்த்துறை நேற்று ஒரு சர்ப்ரைஸ் செய்தியை அறிவித்திருந்தது போலவே, தமிழக பதிவுத்துறையும் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஆன்லைன் வழி பெறப்படும் ஆவணங்களை பதிவு குறித்து, அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அது என்ன?
சொத்துக்களின் பட்டா தொடர்பான முந்தைய மாற்றங்களை அறிந்து கொள்வதற்கான புதிய வசதியை, வருவாய் துறை விரைவில் அறிமுகம் செய்ய போவதாக நேற்றைய தினம் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.

அதாவது, ஒரு சொத்துக்கான பட்டா, யார் பெயரில் உள்ளது என்று மட்டுமே இப்போது பொதுமக்கள் பார்க்கின்றனர். வருவாய் துறையில் பட்டா, நில அளவை வரைபடம் போன்றவற்றை, ஆன்லைன் வழியே, மக்கள் பார்வையிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சொத்துக்கள்: சொத்துக்களுக்கு சர்வே எண், உட்பிரிவு எண் அடிப்படையில், முந்தைய பத்திரப்பதிவு விபரங்கள், வில்லங்க சான்றாக பதிவுத்துறையில் வழங்கப்படுவதை போல, முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை அறிக்கையாக மக்களுக்கு வழங்க, வருவாய் துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வருவாய் துறையின் இந்த அதிரடிகளை போலவே, பதிவுத்துறையும் முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.. அதன்படி, கடன் அடமான பத்திரங்களை ரத்து செய்யும் ஆவணங்களை, ஆன்லைன் முறையில் பதிவு செய்யலாம்... இந்த பத்திரங்களை பொறுத்தவரை, இதில் சம்பந்தப்பட்டவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வராமல், ஆன்லைன் முறையிலேயே தாக்கல் செய்தால் போதுமாம்.
பரிமாற்றம்: அதாவது, கணக்கு முடிப்பது உள்ளிட்ட இனங்களில் தேவைப்படும் ஆவணங்களை பதிவு செய்வதில், எந்தவிதமான பரிமாற்றமும் இல்லை என்பதால், இந்த பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டன. ஆனால், இவ்வாறு தாக்கலாகும் ஆவணங்களை சார் - பதிவாளர்கள் திருப்பி அனுப்புவதாக, புகார் கூறப்படுகிறது...
எனவேதான், இந்த புதிய ஏற்பாட்டினை பதிவுத்துறை செய்துள்ளதுடன், ஆன்லைன் வழி பெறப்படும் ஆவணங்களை பதிவுக்கு மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பத்திரப்பதிவு: பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இதுகுறித்து உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறார்.. அதில், "கடன் கணக்கு முடித்தல் உள்ளிட்ட, குறிப்பிட்ட சில இனங்களில் ஆவணங்களை, ஆன்லைன் முறையில், மக்கள் தாக்கல் செய்கின்றனர். இதில், ஆதார் வழி அடையாளம் சரி பார்க்கப்பட்டதை, சார் பதிவாளர்கள் ஏற்க வேண்டும்.
ஆன்லைன் முறையில் தாக்கலானதை அதிகாரப்பூர்வமானதாக ஏற்று, அதை அதே நாளில் பதிவு செய்ய வேண்டும். அதில் கூடுதல் விபரங்கள் ஏதாவது தேவைப்பட்டால், மறுநாள் முதல் ஆவணமாக, அதை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு ஆன்லைன் வழி ஆவணங்களை பதிவு செய்த பிறகே, மற்ற நேரடி பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும். உரிய காரணங்கள் இன்றி, இத்தகைய பத்திரங்களை திருப்பி அனுப்பக் கூடாது.
ஆவணதாரர்கள்: உரிய காரணம் இருந்தாலும், ஒரு முறைக்கு மேல் இதற்கு திருப்பி அனுப்புவதற்கான ரசீதை பயன்படுத்தக் கூடாது. தேவையில்லாமல், ஆவணதாரர்களை நேரில் வர வற்புறுத்தக் கூடாது. இதில் கையொப்பம் இட்ட ஆவணம் இல்லை என்பதை புரிந்து, சார் பதிவாளர்கள் செயல்பட வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications