தீபாவளி.. ரிசர்வேசன் இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுமா? தமிழக தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக 2 ரயில்களை இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், மக்கள் புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளியூர்களில் வேலைக்காகவும், படிப்புக்காகவும் சென்றுள்ளவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி கொண்டாட செல்வது வழக்கம்.

அரசு அறிவித்துள்ள சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய்களுக்கு மேல் கட்டணம் உள்ளதால் சாமானிய மக்களால் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. பலரும் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். கட்டணம் குறைவாக இருப்பதோடு சவுகரியமும் அதிகம் என்பதால் ரயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே ரிசர்வேசன் செய்து விடுவார்கள்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூன் மாதத்தில் முடிந்தது. அனைத்து ரயில்களிலும் 200க்கு மேல் வெயிட்டிங் லிஸ்ட் உள்ளது. இதையடுத்து, பயணிகள் நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன்பேரில், மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட இரண்டு ரயில்களில் பண்டிகைக்கு சென்றுவர பொருத்தமான ஓரிரு நாட்களுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. இருப்பினும், இந்த இரண்டு ரயில்களும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. சில ரயில்கள் ஏன் அறிவித்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதனால் தென்மாவட்ட பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, கூடுதல் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதோடு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா, கொரோனா காலத்திற்கு முன்பு வரை பண்டிகை காலத்தில் ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத மக்களுக்காக, பகல் நேர முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, பண்டிகை காலத்தில் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் போதிய அளவு இயக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை-நாகர்கோவில் இடையே 2 முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க வேண்டும். இது ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே அதிகாரிகள், தற்போது, தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறோம்.
பயணிகளின் தேவை அதிகமுள்ள வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்து உள்ளோம். அந்தவகையில், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை எதிர்பார்க்கலாம். மேலும், முன்பதிவில்லாத ரயில் இயக்குவது தொடர்பான முடிவு பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications