நிதியமைச்சர் பிடிஆர் பெயரில் போலி மின்னஞ்சல் தொடங்கி அவதூறு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
சென்னை ; நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்கு தொடங்கி குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக அவர் பதிவிட்டதுபோன்று அவதூறு கருத்துகளை பரப்பியதாக அமைச்சர் தரப்பு அளித்த புகாரின்பேரில் மர்ம நபர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.
பிரபலங்களை குறிவைத்து அவதூறு பரப்பும் வகையில் போலி ட்விட்டர் கணக்குகளை உருவாக்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டும் திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கை தொடங்கி அவதூறு பரப்பினர்.

இவ்வாறு போலி கணக்கு விவகாரத்தில் சிக்காத பிரபலங்களே இல்லை எனலாம். ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனை வந்தனா கட்டாரியாவை சாதி ரீதியாக இழிவுபடுத்திய சிலர் பின்னர் அவர் பெயரில் போலி ட்விட்டர் கணக்கை தொடங்கி அவர் போடுவது போன்று பதிவை போட்டனர்.
அதைப்பற்றி அறியாத சில ஊடகங்களே அவரது பதிவு என பிரசுரித்தன. பின்னர் வந்தனா கட்டாரியா அது தனது சொந்த கணக்கல்ல என்று விளக்கம் கொடுத்தார். இதுபோன்று நேரடியாக மோத இயலாமல் மறைமுகமாக அவதூறு பரப்பு மர்ம நபர்களால் சமூக அமைதி கெடும் சூழ்நிலையும் சம்பந்தப்பட்ட நபர் பேசாத ஒன்றை பேசியதாக பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து பரவும் நிலையும் ஏற்படுகிறது.
இதில் சமீபத்தில் இலக்காகியிருப்பவர் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதி அமைச்சர் தான். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் திமுகவின் ஐடிவிங் தலைவராகவும் உள்ளார். அவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பிரபலமான நபராகவும் அடுத்தவர்களுக்கு பதிலடி கொடுப்பவராகவும் உள்ளார்.
இந்நிலையில் பிடிஆர் மீது அவதூறு பரப்புவதற்காக அவரது மின்னஞ்சல் போன்று போலி மின்னஞ்சல் கணக்கை சில விஷமிகள் உருவாக்கி குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக அவர் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதுபோல் பதிவிட்டு விஷம செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அவதூறு பரப்பிய மர்ம நபர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
இதுகுறித்து நிதியமைச்சரின் கவனத்துக்கு சிலர் கொண்டு வந்ததன் பேரில் உடனடியாக இதுகுறித்து சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் நிதியமைச்சர் பிடிஆர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், அபிராமபுரம் போலீஸார் இந்திய தண்டனை சட்டப் பிரிவு, 153(a) -(மதம் ,இனம் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டுதல்), 295(a)- (ஒரு மதத்தினரின் நம்பிக்கையை வேண்டுமென்றே புண்படுத்துதல்), 465 பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், 467 (மதிப்புமிக்க பத்திரம் போன்றவற்றை பொய்யாக புனைதல்), 500 - (அவதூறு பரப்புதல்), 34- உள் நோக்கத்துடன் மற்றவர் போல் சித்தரித்து நடிப்பது, தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66( D) என ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications