சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: அதிமுக குறித் அவதூறாக பேசியதாக, அக்கட்சியின் வழக்கறிஞர் பாபு முருகவேல் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடுத்த நிலையில், பாபு முருகவேலின் அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த, சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா இறந்த நேரத்தில் திமுகவுக்கு வர 40 எம்எல்ஏக்கள் தயாராக இருந்ததாகவும் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு ர.ராக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பவர் அப்பவுக்கு எதிராக எம்பி எம்எல்ஏ களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பாவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 17ம் தேதி நடைபெற்றது. அப்பாவு சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் வில்சன், "ஒரு கட்சியின் மீது அவதூறு பரப்பப்படுவதாக அக்கட்சி நினைத்ததால், கட்சியின் தலைவர் அல்லது பொதுச்செயலாளர்தான் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய முடியும். ஆனால் வழக்கில் சம்பந்தமே இல்லாமல் பாபு முருகவேல் இங்கு வழக்கு தொடுத்திருக்கிறார்" என்று வாதாடினார்.
இதனையடுத்த பாபுவிடம் நீதிபதி, அவதூறு வழக்கை தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமை உள்ளது. 40 எம்.எல்.ஏ.க்களில் எவரும் வழக்கு தாக்கல் செய்யவில்லை. அப்பாவு தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. உங்கள் கட்சிக்கு அவர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கற்பனையாக கூறக்கூடாது என பாபுமுருகவேல் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, அதிமுக ஆட்சி ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை பூர்த்தி செய்தது. எவரும் கட்சி தாவவில்லை. சபாநாயகர் பேச்சால் எப்படி அதிமுக-வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது? எப்படி அவதூறாகும் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் அப்பாவுவின் மனுவுக்கு அக்டோபர் 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பாபு முருகவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்திருந்தார். இதற்கிடையில் சபாநாயகர் பேச்சு அவதூறு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். எனவே இன்று விசாரணைக்கு வந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications