உலக அமைதிக்காக.. 1,000 பேருடன் அமர்ந்து கண்ணை மூடி தியானம்.. நடிகை நமீதா செய்த செயல்!
புதுச்சேரி: புதுச்சேரியில் 1,000 பேருடன் அமர்ந்து ஒரு நிமிடம் தியானம் செய்து நடிகை நமீதா அமைதியை வலியுறுத்தி இருக்கிறார். தொடர்ந்து டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், தீவிரவாதத்தை கண்டு மக்கள் பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கல்வி வழியே நீடித்த அமைதியை நிலை நிறுத்தலாம் என்ற கோட்பாட்டை முன்வைத்து யுனிவர்சல் பீஸ் பவுண்டேஷன் சார்பில் திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குரு மகான் தலைமையில் உலக அமைதி தின விழா நடந்தது. தனியார் திருமண மண்டபத்தில் தனிநபர் அமைதி, உலக அமைதி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வு மனிதநேயம், கருணை, சகோதரத்துவம் மற்றும் உலக ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை நமீதா பங்கேற்று தியானத்தில் ஈடுபட்டு உலக அமைதியை வலியுறுத்தினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் ஒன்று சேர்ந்து அமைதி, அன்பு, ஒற்றுமை, ஞானம் ஆகியவற்றை ஒரு நிமிடம் அமைதி காத்து கொண்டாடினர்.
உலக அமைதிக்காக இணைந்து செயல்படுவோம்.. மனித குலத்தில் அன்பும் ஒற்றுமையும் பரவட்டும் என்ற வகையில் இந்த விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரி ஆச்சார்யா பள்ளியைச் சார்ந்த மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நமீதாவிடம் டெல்லி குண்டு வெடிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நமீதா, இந்த உலகத்தில் அமைதி மீது நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் தீவிரவாதம், மக்களுக்கு தொல்லை கொடுப்பது, வலி கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களும் உள்ளனர். அதை எதுவும் செய்ய முடியாது.
ஆனால் நாம் தான் தைரியமாக இருக்க வேண்டும். மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை மத்திய அரசு எடுக்கும் என நம்புகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications