கூண்டில் அடைபடும் சீன "டிராகன்".. ஜி 20 மீட்டில் இந்தியா - அமெரிக்கா போடும் மெகா டீலிங்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள் ஜி20 உச்சி மாநாட்டில் ரயில் மற்றும் துறைமுகங்கள் சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஜி20 டெல்லி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கியது (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.

 Delhi G20 Summit: US, India, Saudi Arabia to sign a potential infrastructure deal involving rail and ports

இந்த ஜி 20 உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

என்ன தீம்?: அதிகாரப்பூர்வ G20 இணையதளத்தின்படி, 18வது G20 உச்சி மாநாட்டின் தீம் "வசுதைவ குடும்பகம்". இது "ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்று மொழிபெயர்க்கப்படும் சமஸ்கிருத சொற்றொடர் ஆகும். பழங்கால சமஸ்கிருத இலக்கியங்களில், குறிப்பாக மகா உபநிடதத்தில் இந்த சொற்றொடர் இருந்தது. மனிதர்கள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் உட்பட அனைத்து உயிர்களின் மதிப்பையும், பூமி மற்றும் பரந்த பிரபஞ்சத்தில் நாம் எல்லோரும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த கூட்டம் நடக்க உள்ளது.

இதற்காக சர்வதேச தலைவர்கள் பலர் டெல்லிக்கு வந்து உள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்தர பிரதேச விமான நிலையங்களில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கே சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் டெல்லியில் மொத்தமாக பாதுகாப்பு மாற்றப்பட்டு உள்ளது. நகரத்திற்கு உள்ளே பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

முக்கிய ஒப்பந்தம்; இந்த நிலையில் அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள் ஜி20 உச்சி மாநாட்டில் ரயில் மற்றும் துறைமுகங்கள் சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு போட்டியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சீனாவின் பெல்ட் மற்றும் ரோடு பார்வையில் மத்திய கிழக்கு ஒரு முக்கிய பகுதியாகும். அமெரிக்க அதிபர் "ஜனாதிபதி பிடன் இந்தியா பிரதமர் மோடி, மற்றும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் இன்று ஒரு பெரிய கூட்டு உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தை போடுவார்கள் என்று கூறப்படுகிறது.

வளைகுடா மற்றும் அரபு நாடுகளை ரயில்வே நெட்வொர்க் மூலம் இணைக்கும் விதமாகவும், ஜி 20யில் அருகருகே இருக்கும் நாடுகளை ரயில் மூலம் இணைக்கும் விதமாகவும், மற்ற நாடுகளை கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் விதமாகவும் இந்த ஒப்பந்தம் போடப்பட உள்ளது.

பெல்ட் அண்ட் ரோடு: சீனாவின் மாபெரும் திட்டமான தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) எனப்படும் திட்டத்தை தற்போது அந்த நாடு தீவிரமாக செயல்படுத்த தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க ஒரு தனி நாடு செயல்படுத்த போகும் மிகப்பெரிய திட்டமாக இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) இருக்க போகிறது.

உலகம் முழுக்க இருக்கும் நாடுகளை சீனாவுடன் இணைப்பதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்தின் நோக்கம். 2013ல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 160 நாடுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. சீனா அல்லது வேறு ஒரு தனி நாடு உலகில் அறிவித்ததிலேயே இந்த திட்டம்தான் பெரிய திட்டம் ஆகும். சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் கனவு திட்டம் இதுவாகும்.

இந்த திட்டத்தை 2013ல் ஜி ஜிங்பிங் இந்தோனேசியா மற்றும் கஜகஸ்தான் பயணத்தின் போது அறிவித்தார். இதில் இருக்கும் தி பெல்ட் என்பது உலகம் முழுக்க சீனா அமைக்க உள்ள சாலைகளை குறிக்கும். ரோட் என்பது உலகம் முழுக்க சீனா கடல் வழியாக ஏற்படுத்த உள்ள கடல் போக்குவரத்தை குறிக்கும். இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் அந்நாட்டு அரசியலமைப்பில் ஒரு அங்கமாக 2017ல் சேர்க்கப்பட்டது.

 Delhi G20 Summit: US, India, Saudi Arabia to sign a potential infrastructure deal involving rail and ports

இதன் மூலம் உலகில் இருக்கும் நாடுகளின் பகுதிகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சாலைகள் அமைத்து சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும். இதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்தின் நோக்கம்.

இதற்கு போட்டியாகவே ஜி 20 நாடுகளை இணைக்கும் விதமாக அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள் ஜி20 உச்சி மாநாட்டில் ரயில் மற்றும் துறைமுகங்கள் சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+