அங்கீகாரம் கேட்ட மனுவை விசாரிக்கவே கூடாது..டெல்லி ஐகோர்ட்டில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிரான எடப்பாடி தரப்பு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரிக்கவே கூடாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் எனவும் இபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிரான எடப்பாடி தரப்பு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று இந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

Delhi High Court adjourned the hearing on the EPS petition to April 12

எடப்பாடி தாக்கல் செய்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அவரின் இந்த மனுவிற்கு முக்கிய காரணம் உள்ளதாக கூறப்படுகிறது.இந்த மனு மூலம் அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதுஅதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதே நாளில் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

ஆனால் அதிமுகவின் பொதுக்குழு முடிவை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவுகளையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தேர்தல் ஆணையம் இப்போது ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

Delhi High Court adjourned the hearing on the EPS petition to April 12

தேர்தல் ஆணைய முடிவுகள் தன்னிச்சையானது. உச்ச நீதிமன்ற முடிவிற்கு எதிராக தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தாலும், அதை எதிர்த்து வழக்கு போடுவது பெரிதாக பலன் அளிக்காது. இதற்கு முன்பே தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்பட்ட வரலாறுகள் உள்ளன. எனவே பொதுக்குழு வழக்கில் வந்த தீர்ப்பு என்பது எடப்பாடிக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட். அதாவது பாருங்க உச்ச நீதிமன்றம் எங்க வாதத்தை ஏற்றுக்கொண்டது.. நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வெற்றிபெறும் தரப்பு தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி கோரிக்கை வைக்க முடியும். ஆனால் தேர்தல் ஆணையம் இதை ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.

இருக்கையை மாற்றவில்லை

இப்போது வரை தேர்தல் ஆணைய ஆவணத்தில் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர். ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலுடன் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மனு அளித்து உள்ளனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்து இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் மனு அளித்து உள்ளனர். ஆனால் இதை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அடிப்படை தொண்டர்கள் மூலமும் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்.

அப்படி இருக்கும் போது அதை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி ஓ பன்னீர்செல்வம் தன்னை இப்போதும் எதிர்க்கட்சி துணை தலைவர் என்று கூறி வருகிறார். சட்டசபையிலும் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் இருக்கிறார். தேர்தல் ஆணையம் இதில் முடிவு எடுக்கவில்லை என்று சபாநாயகர் அப்பாவுவும் இவர் இருக்கையை மாற்றவில்லை.

வழக்கு தொடர்ந்தது ஏன்?

இதன் காரணமாகவே ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்ய இருக்கிறார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஓ பன்னீர்செல்வத்தின் அஸ்திவாரத்தை காலி செய்கிறார், ஒபிஎஸ்ஸுக்கு இருக்கும் இந்த ஒரே ஒரு கதவையும் மொத்தமாக அடைத்து மூட முடிவு செய்து இருக்கிறார் எடப்பாடி. அவருக்கு ஆதரவாக தேர்தல் ஆணைய ஆவணங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதையும் காலி செய்ய முடிவு செய்துள்ளார் எடப்பாடி.

Delhi High Court adjourned the hearing on the EPS petition to April 12

இதை மனதில் வைத்தே அதிமுகவின் பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும், பொதுக்குழு முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். இதில் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் விரைவில் ஓ பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி பறிபோகும் நிலை ஏற்படும். இன்று இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்தது ஏன்? என நீதிபதி பிரதீபா சிங் கேள்வி எழுப்பிய நிலையில், கர்நாடக தேர்தலில் போட்டியிட இருப்பதால் விரைந்து முடிவெடுக்கவே டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது. தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை ஏப்ரல் 12-க்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+