அச்சத்தில் மோடி.. ராகுலை சந்திக்கும் டெல்லி அதிகாரிகள்.. மாறும் காட்சிகள்? சீக்ரெட்டை சொல்லிட்டாரே!
சென்னை: ராகுல் காந்தியை அதிகாரிகள் சந்திக்க ஆரம்பித்துவிட்டனர். டெல்லியில் அதிகாரிகள் ராகுல் காந்தியை சந்திக்க தொடங்கிவிட்டனர். அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும். அங்கே காட்சிகள் மாறுகின்றன. அவர்களுக்கு முடிவுகள் முன்கூட்டியே தெரியும், என்று காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்று 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடக்கிறது. இந்த லோக்சபா தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்..

பேட்டி: அதில், காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற போகிறது என்று எல்லோருக்கும் தெரியும். நிதானத்தில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். கண்டிப்பாக காங்கிரஸ் ஆட்சி அமையும். மோடி போன்ற நிதானத்தில் இல்லாத ஆட்கள்தான் பாஜக ஆட்சிக்கு வரும் என்கிறார்கள். 400 இடங்கள் எல்லாம் பாஜக பிடிக்கும் என்று கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் சிலர் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நிதானத்தில் இருக்கும் யாரும் பாஜக வெல்லும்.. ஆட்சி அமைக்கும் என்று சொல்ல மாட்டார்கள்.
ஜிஎஸ்டி மூலம் மக்களை கொடுமைப்படுத்தும் இந்த ஆட்சி எதற்கு. 10 வருடத்தில் இவர்கள் செய்தது என்ன? எதிர்க்கட்சி இல்லை என்று மோடி சொல்கிறார். பின்னர் ஏன் காலை முதல் மாலை வரை மோடி உளறுகிறார். ஏன் பதட்டமாக இருக்கிறார். ஏன் தோல்வி பயத்தில் பேசுகிறார். மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதோ அவருக்கு பயம் வந்துவிட்டது. அச்சத்தில் இருக்கிறார்.
மோடி அச்சம்: அவர் அச்சத்தில் உளறுகிறார். தோல்வி பயத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார். எதிர்கட்சி இல்லை என்று கூறியவர் கடும் பதற்றத்தில் இப்போது உதறிக்கொண்டு இருக்கிறார். இந்தியா முழுக்க இதுதான் நிலைமை. இந்தியா முழுக்க மோடிக்கு எதிரான மனநிலை உள்ளது. பெரிய புரட்சி மோடிக்கு எதிராக உள்ளது. தேர்தல் புரட்சியாக இது உள்ளது. இதுவே பெரிய அதிர்ஷ்டம். தேர்தல் புரட்சி ஒன்றை மக்கள் செய்துள்ளனர். இது ஆயுத புரட்சியாக மாறாத வரை சந்தோசம். ஜிஎஸ்டி வரி என்று மக்களை இவர்கள் துன்புறுத்தி வருகின்றனர்.
இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால்தான் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற போகிறது என்று எல்லோருக்கும் தெரியும். நிதானத்தில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். கண்டிப்பாக காங்கிரஸ் ஆட்சி அமையும். மோடி போன்ற நிதானத்தில் இல்லாத ஆட்கள்தான் பாஜக ஆட்சிக்கு வரும் என்கிறார்கள். அதானி, அம்பானி பற்றி பாராளுமன்றத்தில் கேட்ட உடன் எதிர்கட்சிகளை வெளியேற்றியது யார்? மோடி அவர்களிடம் பொட்டி வாங்கி பழகியவரா?
ராகுல் காந்தியை அதிகாரிகள் சந்திக்க ஆரம்பித்துவிட்டனர். டெல்லியில் அதிகாரிகள் ராகுல் காந்தியை சந்திக்க தொடங்கிவிட்டனர். அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும். அங்கே காட்சிகள் மாறுகின்றன. அவர்களுக்கு முடிவுகள் முன்கூட்டியே தெரியும். அப்படிதான் அவர்களுக்கு தெரிகிறது. ஆட்சி மாறபோகிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். தங்களை காப்பாற்றிக்கொள்ள அதிகாரிகள் ரெடியாகி உள்ளனர். அவர்கள் ராகுலை சந்தித்து வருகின்றனர். அதை கேமரா முன் சொல்ல முடியாது. ஆட்சி மாறுகிறது என்பதை முடிவே செய்துவிட்டனர்.
இதற்கு முன் இப்படி எல்லாம் நடந்தது இல்லை. ராகுலை பார்க்கிறார். கார்கேவை பார்க்கிறார். கடந்த 5 வருடம் முன் இப்படி நடந்ததே இல்லை. அந்த அளவிற்கு நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications