சேகர் ரெட்டி வழக்கில் ஏன் திடீர் ஸ்பீட்.. அதிமுக விஐபிகளுக்கு அதிரடி நோட்டீஸ்.. கை கழுவியதா டெல்லி?
சென்னை: சேகர் ரெட்டி டைரி தொடர்பாக அதிமுக முக்கிய தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதை பார்க்கும்போது, அதிமுகவை டெல்லி கைவிட்டு விட்டதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தொழிலதிபர் சேகர் ரெட்டி சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சார்பாக வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
சிபிஐ வழக்கு முடிவிற்கு வந்த நிலையில், சேகர் ரெட்டி வீட்டில் விசாரணையின்போது, கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்த பெயர்களை ஆய்வு செய்ததன், அடிப்படையில், அதிமுகவின் முக்கிய தலைவர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதிரடிநோட்டீஸ்
எதிர்கட்சித் தலைவவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், சி விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், முன்னாள் சபாநாயகர் தனபால், தங்கமணி, செல்லூர் ராஜு, எம்சி சம்பத், மறைந்த அதிமுக எம்எல்ஏ பாப்பா சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ கருணாஸ், தற்போது திமுகவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் உட்பட 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி திமுகவில்
வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸ் வெறுமனே, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்ற அதிமுக தலைவர்களுக்கு மட்டுமல்ல. அப்போது அதிமுகவிலிருந்து, இப்போது திமுகவில் அமைச்சராக இருக்கும், செந்தில் பாலாஜிக்கும் சேர்த்துதான் என்பதும் இதில் கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கிறது. செந்தில் பாலாஜி தற்போது திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

திமுக நிலைமை
திமுக ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான துறை மின்சாரத் துறை தான். இருப்பினும், அது திட்டமிட்ட வதந்தி, மின்சாரத் துறையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தொடர்ந்து விளக்கங்கள் கொடுத்து வந்தார் செந்தில் பாலாஜி. தற்போது வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது மற்றொரு தலைவலியாக பார்க்கப்படுகிறது. இந்த நோட்டீஸ் விவகாரத்தை வைத்து அதிமுக தலைவர்களை கார்னர் பண்ணலாம் என்று திமுக நினைத்தாலும், தங்களிடமுள்ள அமைச்சர் ஒருவருக்கும் அந்த நோட்டீஸ் வந்து சேர்ந்திருப்பது அரசியல் ரீதியாக திமுக இறங்கி அடித்து ஆட முடியாமல் இருப்பதற்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.

டெல்லி நினைப்பு
இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சம் என்னவென்றால் , டெல்லி தலைமை தற்போதைய அதிமுக தலைவர்களை கைவிட்டு விட்டதா என்ற கேள்வியை இந்த நோட்டீஸ் விவகாரம் எழுப்பியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கேட்ட இடங்களை அதிமுக ஒதுக்கவில்லை. தடாலடியாக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்டது. கூட்டணி கட்சியான பாஜக இதனால் கடும் அதிர்ச்சியில் உள்ளது. இதையும் கூட்டிக் கழித்துப் பார்த்து ஒன் பிளஸ் ஒன் = 2 என்று கூறக்கூடிய அரசியல் விமர்சகர்களும் இருக்கிறார்கள்.

கோட நாடு விவகாரம்
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை, தமிழக அரசால் துரிதமாக நடத்தப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களும் விசாரணையை தொடர பச்சைக்கொடி காட்டி விட்டன. இந்த விவகாரத்தில் அதிமுக தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. இன்னொரு பக்கம் வருமான வரித்துறை பழைய வழக்கு தொடர்பாக இப்போது தூசி தட்டி வேகத்தை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே கோடநாடு விவகாரத்தில் விசாரணை மீண்டும் தேவை கிடையாது என்று அதிமுக தலைவர்கள் கூறி வருகிறார்கள். எனவே அவர்கள் கோடநாடு விசாரணையால் அதிருப்தியில் இருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த மாதிரி ஒரு நெருக்கடிக்குள் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புவது மீண்டும் அவர்களை நெருக்கடிக்குள் தள்ளும் என்பது டெல்லியில் உள்ளவர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விரிசல்
இதை வைத்து பார்க்கும்போது டெல்லிக்கும் அதிமுக தலைமைக்கும் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு விட்டதா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது என்கிறார்கள் இந்த விவகாரங்களை உன்னிப்பாக கவனிக்கும் பல அரசியல் விமர்சகர்கள்.

வைக்கப்படும் செக்
இதுபற்றி நம்மிடம் பேசிய ஒரு அரசியல் விமர்சகர், கூறுகையில், எப்போதெல்லாம் அதிமுக தலைமையை டெல்லி கண்டுகொள்ளாமல், அரசியலில் காய் நகர்த்துகிறதோ, அப்போதெல்லாம் இது போன்ற நெருக்கடிகள் வருவது சகஜமாக மாறிவிட்டது. உள்ளாட்சி தேர்தல் கணக்குகளும் இதில் அடங்கியிருக்கின்றன . சமீபத்தில்தான் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை முறையே துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என நியமித்தது தவறு இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே அதிமுக தலைமை இறங்கி ஆடலாம் என நினைத்தது. அதற்குள்ளாக இப்படி ஒரு செக் வந்துள்ளது. அதிமுக இதை எப்படி சமாளிக்கும் என்பதை வைத்து தான், இந்த விஷயத்தில், அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்கிறார், உறுதியாக.

கைவிட்ட சிபிஐ
சேகர் ரெட்டிக்கு தொடர்புடைய, சென்னை, வேலூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இந்த ரூ.147 கோடி பணத்தில் ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் சேகர் ரெட்டி நோட்டுகளை சட்ட விரோதமாகப் பதுக்கியதாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், சேகர் ரெட்டி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்குப் பதிவு செய்தன. ஆனால், சேகர் ரெட்டி மீது சிபிஐ பதிவு செய்த 3 வழக்குகளும் ஆதாரம் இல்லை என முடித்து வைக்கப்பட்டன. இப்படியான ஒரு வழக்கில்தான் இப்போது அதிமுக முக்கிய பிரமுகர்களுக்கு நோட்டீஸ் பறந்துள்ளது. எனவே, இதில் அரசியல்தான் அதிகம் இருக்க கூடும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications