அச்சுறுத்தும் "டெல்டா+".. கேரளாவில் 3 கிராமங்களுக்கு சீல்.. ம.பியில் முதல் பலி.. வேகமாக பரவுகிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் டெல்டா + கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த புதிய வகை கொரோனா வேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது.

Recommended Video

    எச்சரித்தது போலவே நடக்கிறது.. Maharashtra-வில் திடீரென அதிகரித்த Coronavirus பாதிப்பு

    டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா + வகை கொரோனாவாக மாறியுள்ளது. உலகம் முழுக்க 20 நாடுகளில் இந்த டெல்டா + கொரோனா பரவி வரும் நிலையில் இந்தியாவில் நேற்றைய கணக்குப்படி 41 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

    ஆனால் போதிய ஜீனோம் ஆராய்ச்சிகள் நடைபெறாத காரணத்தால் இந்தியாவில் உண்மையான டெல்டா + கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    எப்படி

    எப்படி

    இந்தியாவில் எங்கெல்லாம் டெல்டா + கொரோனா கேஸ்கள் பதிவாகிறதோ அங்கெல்லாம் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. டெல்டா + வைரஸின் "இரட்டிப்பு" நேரம் மிக வேகமாக உள்ளது.

    வேகமாக

    வேகமாக

    அதாவது கேஸ்கள் டபுள் ஆகும் வேகம் துரிதமாக உள்ளது. கடந்த செவ்வாய் கிழமை இந்த டெல்டா + கேஸ்களில் எண்ணிக்கை 22 ஆக இருந்தது. புதன் கிழமை இது 41 ஆக உயர்ந்தது. இதனால் டெல்டா + கேஸ்கள் இந்தியாவில் வரும் நாட்களில் இதைவிட அதிகமாக உயர வாய்ப்புள்ளது. முதல் கட்டமாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா + கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னை

    சென்னை

    சென்னையில் டெல்டா + கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நர்ஸ் குணமடைந்துவிட்டார். இவர் மூலம் யாருக்கும் கொரோனா பரவவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் டெல்டா + வகை கொரோனா காரணமாக மூன்று கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டாவில் உள்ள கட்பாரா கிராமம், பாலக்காட்டில் உள்ள பரலி, பரியாரி ஆகிய கிராமங்களில் டெல்டா + வைரஸ் காரணமாக மொத்தமாக டீல் வைக்கப்பட்டுள்ளது.

     மரணம்

    மரணம்

    மக்கள் யாரும் வெளியே வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் டெல்டா + கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் இன்று மரணம் அடைந்தார் இன்னொருவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. டெல்டா + கொரோனா நினைத்ததை விட வேகமாக பரவுவதால் வரும் நாட்களில் கேஸ்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+