குன்றத்திலே..முருகன் பாடலுக்கு முகம் சுளிக்கும் நடனம்! ’ரோஸ்’ டீசர்ட் திருச்சி சாதனா! களி கன்பார்ம்?
சென்னை : ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனங்கள் என சர்ச்சையில் சிக்கி போலீசாரின் எச்சரிக்கைக்கு ஆளான டிக்டாக் திருச்சி சாதனா தற்போது முருகன் பாடலுக்கு ஆபாசமான நடனம் ஆடி இருக்கும் நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.
ஒரு காலத்தில் சினிமா பிரபலங்களை விட அதிக பிரபலம் கொண்டவர்களாக தங்களை கருதிக் கொண்ட சிலர் டிக்டாக் மூலம் வீடியோக்களை வெளியிட்டு உலக லெவல் ஃபேமஸ் என தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டு திரிந்தனர்.
அந்த வகையில் ரவுடி பேபி சூர்யா, டிக்டாக் இலக்கியா, திருச்சி சாதனா, ஜிபி முத்து, லுங்கி பாய்ஸ் ராஜ் பிரியன் போன்றவர்கள் சமூக வலைதளவாசிகள் இடையே ஓரளவு புகழ் பெற்றவர்களாக மாறத் தொடங்கினர்.

டிக்டாக் பிரபலங்கள்
டிக்டாக்கில் ஆபாச நடனங்கள் இரட்டைவர்த்த வசனங்கள் என அடுத்தடுத்து புகார்கள் கிளம்பிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டது. இதை அடுத்து அவர்கள் youtube facebook instagram லைவ் என தங்கள் கடையை மாற்றிக் கொண்டனர். அதில் நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்திய ஜிபி முத்து ராஜ்பிரியன் போன்றவர்கள் தொலைக்காட்சி திரைப்படங்களில் நடித்துவருகின்றனர்.

சர்ச்சைகள்
இந்நிலையில் ஆபாச நடனங்கள் சர்ச்சைகள் என அடுத்தடுத்து வம்பு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட ரவுடி பேபி சூர்யா சிறை செல்ல வேண்டி இருந்தது. அதற்கு அடுத்ததாக ஒரு கிராமத்து பெண்ணிடம் இவ்வளவு திறமையா என வியக்க வைத்தவர் திருச்சி சாதனா. கரூர் அருகே சொந்த ஊரை கொண்ட அவர் முதலில் நடனமாடி மக்களின் வரவேற்பை பெற்றாலும் நாட்கள் செல்ல செல்ல அரைகுறை ஆடை அணிந்து ஆபாச நடனமாடுவது குளிப்பதை கூட வீடியோ எடுத்து போடுவது இரவு நேரங்களில் இரட்டை வசன அறுத்த என அடுத்தடுத்து சர்ச்சைகள் சிக்கினார்.

திருச்சி சாதனா
இதையடுத்து அவர் மக்கள் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கவுண்டமணி சொல்வது போல ஒன்றுமே தெரியாத மாதிரி இந்த மூஞ்சிய எங்க வாங்குன என்பது போல காவல் நிலையத்தில் நின்று கொண்டு இனிமேல் தான் ஆபாசமாக பேசவும் நடமாடவும் மாட்டேன் எனக் கூறியிருந்தார்.

மீண்டும் அட்டகாசம்
சில நாட்கள் வாழை சுருட்டி கொண்டிருந்த திருச்சி சாதனா தற்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்துள்ள முதலில் ஆபாச நடனம் ஆடி வந்த அவர் தற்போது பெரிய அளவிலான சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார். முருகப்பெருமானின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றான குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடலின் ரீமிக்ஸ் ஒன்றுக்கு கண்டமேனிக்கு ஆபாச நடன அசைவுகளுடன் அவர் நடனமாடி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
முருகன் பாடலுக்கு ஆட்டம்
நடனம் ஆடுவதற்கு ஆயிரம் பாடல்கள் இருக்கும்போது கடவுள் பாடலை தான் இப்படி ஆபாச நடனமாடி அசிங்கப்படுத்த வேண்டுமா எனவும், எல்லை மீறி சென்று கொண்டிருக்கும் திருச்சி சாதனாவை எச்சரிப்பதோடு விடாமல் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications