முடியுது பெரிய சகாப்தம்.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை விரைவில் இடிக்க முடிவு? அங்கே என்ன வருது தெரியுமா?
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் விரைவில் இடிக்கப்பட உள்ளது. அங்கே இடிப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கோயம்பேடு இருக்கும் இடத்தில விரைவில் புதிய திட்டம் வர வாய்ப்புள்ளது. இதற்காக அந்த பகுதிகளை இடிபாடுகளை மேற்கொள்ள அரசு ஆலோசனை செய்து வருகிறதாம். விரைவில் இதற்கான டெண்டர் விடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.முன்னதாக அங்கே பார்க் வரும் என்று கூறப்பட்டது.

ஆனால், கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கம் (Creation of Public Horticultural Garden, Public Green Spaces and Public Utilities) செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
150 ஏக்கர் கிண்டி ரேஸ்கோர்ஸை சென்ட்ரல் பூங்காவாக மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ள நிலையில்.. பெரிய சென்ட்ரல் பார்க் கொண்ட உலகளாவிய நகரங்களின் லிஸ்டில் சென்னையில் இணைந்துள்ளது.
1. நியூயார்க் - சென்ட்ரல் பார்க்
2. லண்டன் - ஹைட் பார்க்
3. பெர்லின் - Tiergarten பார்க்
4. டோக்கியோ - யோயோகி பூங்கா
5. மெக்சிகோ - Chapultepec பார்க் ஆகிய பார்க்குகள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது சென்னையில் மிகப்பெரிய பார்க் அமைய உள்ளது.
ரேஸ் கிளப் பார்க்: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் 160.86 ஏக்கர் நிலம் 1.4.1945 ஆம் தேதி முதல் 99 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அரசிடமிருந்து கிண்டி ரேஸ் கிளப் நிருவாகத்திற்கு வழங்கப்பட்ட இந்த நிலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதால் தமிழ்நாடு அரசு குத்தகையை ரத்து செய்து, இந்த நிலத்தினை மீளப்பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டிற்காக உருவாக்கம் செய்யப்படவுள்ளது.
பார்க் வராது: இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்ன கட்டுமானம் கொண்டு வரப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கே அமைக்கப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கோயம்பேடுவில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையம் விரைவில் கலாச்சார, வணிக மற்றும் நிதி மையமாக மாற்றப்படும், ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதே சமயம் ஒரு சில பேருந்துகள், மாநகர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குகின்றன.
ஈசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூர் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயங்கும். இந்த வருட கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும்.
இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது. ஐடி நிறுவனம்; இந்த நிலையில்தான் இங்கே அமைக்கப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோயம்பேடுவில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையம் விரைவில் கலாச்சார, வணிக மற்றும் நிதி மையமாக மாற்றப்படும். மெட்ரோ இணைப்புடன், நிரந்தர திறந்தவெளி சந்தையை உருவாக்க உள்ளனர். மிகப்பெரிய ஃபுட் பிளாசா மற்றும் கிராஃப்ட் பஜார் மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கான கட்டிடங்களை உருவாக்க CMDA திட்டமிட்டுள்ளது.
16 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் பேருந்து நிலையம் பூங்காவாக மேம்படுத்தப்படும். பிரம்மாண்ட ஐடி நிறுவனம் அமைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 2 மாதங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் . அங்கே நில ஆய்வு தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications