சென்னை பல்லாவரம் அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரையில் குவிக்கப்பட்ட ஏராளமான போலீஸ்.. வீடுகள் இடிப்பு
சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரை பகுதியில் நேற்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு, அவற்றை அகற்றி அகலப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. அனகாபுத்தூரில் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் அடையார் ஆற்றை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளது.
சென்னையை 2015 வெள்ளத்திற்கு முன்பு, 2015 வெள்ளத்திற்கு பின்னர் என இரண்டாக பிரிக்கலாம். ஆற்றங்கரைகளில், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒரு சில கட்டிடங்களால் தான் 2015 வெள்ளத்தின் போது வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் பலர் உடைகளை இழந்தனர். பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அரசும் சரி, நீதிமன்றங்களும் சரி, நீர் நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தன.

2015 வெள்ளத்திற்கு பிறகு அடையாறு ஆற்றை ஒட்டிய சிக்கலான அனைத்து ஆக்கிரமிப்புகளுமே அடியோடு அகற்றப்பட்டன. அதேபோல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கணக்கிட்டு அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அந்த வகையில் அடையாறு பாய்ந்தோடும் அனகாபுத்தூரில் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் அடையார் ஆற்றை ஆக்கிரமித்து 700 குடியிருப்புகள், கடைகள் கட்டப்பட்டிருந்தது கணக்கெடுப்பில் தெரியவந்தது. அவற்றை அகற்ற வருவாய் துறை மூலமாக பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு 20 கடைகள், 90-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு, தாம்பரம் தர்காஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை நேற்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க தாம்பரம் மாநகர துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தலைமையில் நீர்வள ஆதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகளை இடிக்கும் பணியில் இறங்கினார்கள். முதல் நாளான நேற்று, சாந்தி நகர், தாய் மூகாம்பிகை நகரில் வீடுகள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் வீடுகள் இடித்து அடியோடு அகற்றப்பட்டன.
இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர்.நகரில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி தொடர்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தால் மாலை 4 மணியளவில் வீடுகளை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் அப்புறப்படுத்தப்பட உள்ளதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 2-வது நாளாக இன்றும் தொடர்ந்துள்ளது. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் ஆற்றங்கரை பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications