சர்ச், மசூதியை காட்டி.. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பது மதசார்பின்மைக்கு முரணானது- ஹைகோர்ட்
சென்னை: உச்சநீதிமன்றம் கூறியும் கூட பிற வழிப்பாட்டு தலங்களை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பது என்பது மதசார்பின்மைக்கு முரணானது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மீது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.
விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு அனுமதிக்கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் கடந்த 16ம் தேதி நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தில் உரிய தகவல்கள் இல்லை. மேலும் பல அரசியல் கட்சிகளும் பேரணி, போராட்டங்களுக்கு அனுமதி கோரியுள்னள. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரும் வழித்தடத்தில் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
இதுமட்டுமின்றி அதோடு அகண்ட பாரதம் கட்டமைப்போம் என மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை இணைத்து படம் வெளியிட்டுள்ளனர். அதோடு அணிவகுப்பு ஊர்வலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அனுமதிக்க கூடாது என வாதிடப்பட்டது. '' என்றார்.
இதையடுத்து ஆர்எஸ்எஸ் தரப்பில், ‛‛கடந்த முறை அணிவகுப்பு ஊர்வலத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேபோல் தற்போது பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அப்படி வழங்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு காரணத்தை அரசு அனுமதி மறுக்கிறது. அகண்ட பாரதம் அமைப்பது என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை. அரசியல் சாசன உரிமைப்படி எந்த காரணமும் இன்றி மறுக்கக்கூடாது'' என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுத்ததற்கு போலீசார் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. அணிவகுப்புக்கு அனுமதி வழங்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டார். உள்ளூர் நிலவரங்களைப் பொறுத்து மாவட்ட நிர்வாகம் நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் நீதிபதி கூறினார்.
இதுமட்டுமின்றி 22ம் தேதி அணிவகுப்புக்கான வழித்தடத்தை 20ம் தேதிக்குள்ளும், 29ம் தேதி பேரணிக்கான வழித்தடத்தை 5 நாட்களுக்கு முன்னதாக இறுதி செய்யப்பட வேண்டுமென நீதிமன்றம் கூறியது. அதோடு பேரணி தொடங்கும் இடம் மற்றும் நிறைவடையும் இடம் தொடர்பாக எந்த மாற்றமும் செய்யக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார். அணிவகுப்பு நடத்த அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்குத் தடை விதிக்க முடியாது. அணிவகுப்புக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி தற்போது ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஜெயச்சந்திரன் சில முக்கிய கேள்விகளை எழுப்பி தமிழக அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, ‛‛ அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பது என்பது மதசார்பற்ற அல்லது ஜனாயக ஆட்சி முறைக்கு ஒத்துவராது.
அதோடு ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தங்களில் இருந்து மாறுபட்ட பிற வழிபாட்டு தலங்கள் (மசூதி, சர்ச்) இருப்பதை காரணம் காட்டி ஊர்வலம் நடத்துவதை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுவது. உச்சநீதிமன்றம் கூறியும் கூட இப்படி செய்வது என்பது இந்திய அரசியலமைப்பின் அடித்தளமாக இருக்கும் மதசார்பின்மை கொள்கைக்கு முரணானது'' என தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications