பள்ளி ஆண்டு விழாவில் சினிமா பாடல்களை தவிர்க்கணும்! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை 77 உத்தரவுகள்!
சென்னை: பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 77 வகையான உத்தரவுகளை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த உத்தரவுகள் பற்றி முடிவெடுக்கப்பட்டது.
அதன் படி இனி மாணவர்களின் மனம் பாதிக்கும் படி ஆசிரியர்கள் எந்த தண்டனையும் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்யும் பொருட்டு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை நகரம், குக்கிராமம் என பார்க்காமல் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் நேரடி விசிட் அடித்து ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில் ஆசிரியர்களுக்கு 77 வகையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

சினிமா பாடல்கள்
அதன்படி பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை தவிர்க்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் போன் பேசக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாணவர்களின் மனம் பாதிக்கும் படி ஆசிரியர்கள் எந்த தண்டனையும் வழங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழிலதிபதிர்கள்
மேலும், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்களை சந்தித்து பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிகள் பெறலாம் என அனுமதி தரப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதேபோல் மரத்தடியிலும் பழுதான கட்டிடங்களிலும் மாணவர்களை அமர வைக்ககூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரு மணி நேரம்
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஆசிரியர்கள் தங்கள் இ-மெயில்களை திறந்து பார்க்க வேண்டும் என்றும் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாகவே ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளி தொடங்கும் போதும், முடியும் போதும் நமக்கென்ன என இருக்காமல் மாணவர்கள் சாலையை கடக்கும் போது கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மிக சீரியஸான முறையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications